2010-03-11 15:46:28

மியான்மாரில் நடைபெற உள்ள தேர்தலுக்காக அந்நாட்டு மக்கள் மிகச் சிறப்பாக வேண்டிக் கொள்ள வேண்டும் - Yangon உயர்மறைமாவட்ட பேராயர்


மார்ச்11,2010 இருபது ஆண்டுகளுக்குப் பிறகு மியான்மாரில் நடைபெற உள்ள தேர்தலுக்காக அந்நாட்டு மக்கள் மிகச் சிறப்பாக வேண்டிக்கொள்ள வேண்டுமென Yangon உயர்மறைமாவட்ட பேராயர் Charles Bo கேட்டுக் கொண்டுள்ளார்.
மியான்மாரில் உள்ள அனைத்து பங்கு கோவில்களிலும் நற்கருணை ஆராதனையுடன் கூடிய ஒரு நாள் செபவழிபாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென பேராயர் மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதற்கிடையே, இப்புதன், வியாழன் ஆகிய இரு நாட்களிலும் மியான்மாரில் இப்போது ஆட்சியிலிருக்கும் இராணுவ அதிகாரிகள் தேர்தல்கள் குறித்து வெளியிட்டுள்ள பல விதி முறைகள் கவலையைத் தருகின்றன என்று ஐ.நா.தலைமைச் செயலர் Ban Ki-moon கூறியுள்ளார்.
இப்புதன் வெளியிடப்பட்ட விதிமுறைப் படி, அந்நாட்டில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ள Aung San Suu Kyi கடந்த ஆகஸ்ட் மாதம் அந்நிய நாட்டவர் ஒருவருக்கு மறைமுகமாய் அடைக்கலம் தந்தார் என்று குற்றம் சாட்டப்பட்டதால், அவர் இந்தத் தேர்தலில் பங்கேற்க முடியாது என்று தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடை ஐ.நா. பொதுச் செயலர் உட்பட பலரின் எதிர்ப்பைப் பெற்றுள்ளது.
Aung San Suu Kyi மக்களாட்சி முறையில் 20 ஆண்டுகளுக்கு முன்னர் அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அந்தப் பொது தேர்தல் செல்லாது என்றும் இவ்வியாழனன்று அரசாணை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையும் பல நாட்டுத் தலைவர்களின் எதிர்ப்பைப் பெற்றுள்ளது.மியான்மாரில் இவ்வாண்டு தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டபோதிலும், இன்னும் தேர்தலுக்கான நாட்கள் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.







All the contents on this site are copyrighted ©.