2010-03-11 15:46:04

பெண்களுக்கு 33 விழுக்காடு இட ஒதுக்கீடு மசோதா பெரிதும் வரவேற்கப்பட வேண்டியது - ஆக்ரா உயர்மறைமாவட்ட பேராயர்


மார்ச்11,2010 பெண்களுக்கு இந்திய பாராளு மன்றத்திலும், மாநில சட்ட மன்றங்களிலும் 33 விழுக்காடு இட ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டுமென்று இந்தியாவின் ராஜ்ய சபையில் இச்செவ்வாயன்று நிறைவேற்றப்பட்ட மசோதா, பெரிதும் வரவேற்கப்பட வேண்டியதொன்று என ஆக்ரா உயர்மறைமாவட்ட பேராயர் Albert Dsouza கூறினார்.
இந்த மசோதாவை நிறைவேற்றியதால் இந்தியா வரலாறு படைத்துள்ளது என்றும், 14 ஆண்டுகளாக நடந்து வந்த விவாதம் முடிவுக்கு வந்திருக்கிறதென்றும் இந்திய கலாச்சார மையத்தின் இயக்குனரும், இந்திய ஆயர் பேரவையின் நற்செய்தி பரப்புதல் ஆணையத்தின் முன்னாள் செயலருமான அருட்தந்தை Augustin Kanjamala கூறினார்.
இந்தியப் பெண்களுக்கு இது ஒரு வெற்றி என்ற போதிலும், இன்னும் இந்தியாவில் வீடுகளிலும், சமூகத்திலும் பெண்களுக்கு உரிய மதிப்பும் சமத்துவமும் வழங்க வேண்டியுள்ளது என்று சீரோ மலபார் சபைகளின் பிரதிநிதியும், ‘சத்யபீடம்’ வார இதழின் ஆசிரியருமான அருட்தந்தை Paul Thelakat கூறினார்.இந்த மசோதா நிறைவேற்றப்பட்டதால், 543 அங்கத்தினர்களைக் கொண்ட இந்திய பாராளு மன்றத்தில் இனி 181 இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்படும் என்றும், அதேபோல் 28 மாநில சட்ட சபைகளின் 4,109 அங்கத்தினர்களில் 1,370 இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்படும் என்று செய்திக்குறிப்பொன்று கூறுகிறது.







All the contents on this site are copyrighted ©.