2010-03-11 15:46:42

புவி வெப்பமடைதல் குறித்த அறிக்கை மறு பரிசீலனை செய்யப்படும் - ஐ.நா.தலைமைச் செயலர் Ban Ki moon


மார்ச்11,2010 புவி வெப்பமடைதல் குறித்த அறிக்கை மறு பரிசீலனை செய்யப்படும் என்று ஐ.நா.தலைமைச் செயலர் கூறியுள்ளார்.
நாம் எதிர்பார்த்த வேகத்தை விட, மனிதர்களின் பல்வேறு செயல்பாடுகளால் புவி வெப்பமடைந்து வருகிறதென, சுற்றுச் சூழல் மாற்றங்கள் குறித்த பன்னாட்டு அரசுகளின் பிரதிநிதிக் குழுவும், நோல் பரிசு பெற்ற குழுவுமான IPCC, 2007ஆம் ஆண்டு வெளியிட்ட ஒரு அறிக்கையின் பல பகுதிகள் தேவைக்கும் அதிகமாக மிகைப்படுத்திச் சொல்லப்பட்டுள்ளன என்று பல அறிவியலாளர்கள் கருத்து கூறி வருகின்றனர்.
இந்தச் சூழலில் இந்த அறிக்கை மறு பரில்சீலனை செய்யப்படும் என்றும், ஆனால் இப்போதுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ள பெரும்பாலான மாற்றங்களைக் கண்கூடாக நாம் கண்டு வருகிறோம் என்றும் Ban Ki moon தெரிவித்துள்ளார்.IPCCயின் தலைவரான Rajendra Pachauri செய்தியாளர்களிடம் பேசுகையில் 2007ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ள பல உண்மைகளை உலகம் ஏற்றுக் கொண்டுள்ளது, எனினும் அங்கு கருத்து வேறுபாடுகளை உருவாக்கியுள்ள ஒரு சில அம்சங்கள் மறுபரிசீலனை செய்யப்பட்டு, புதிய அறிக்கை 2014ஆம் ஆண்டுக்குள் வெளியிடப்படும் என்று கூறினார்.







All the contents on this site are copyrighted ©.