2010-03-11 15:45:51

கிறிஸ்தவ, இந்து பெண்கள் கந்தமால் பகுதியில் மதங்களுக்கிடையே நல்லுணர்வை வளர்க்கும் கோரிக்கைகளுடன் பேரணி


மார்ச்11,2010 அண்மையில் அனுசரிக்கப்பட்ட அகில உலக பெண்கள் தினத்தையொட்டி, 4,500 கிறிஸ்தவ, இந்து பெண்கள் ஒரிசாவின் கந்தமால் பகுதியில் மதங்களுக்கிடையே நல்லுணர்வை வளர்க்கும் கோரிக்கைகளுடன் பேரணி ஒன்றை நடத்தினர்.
ஒரிஸ்ஸாவில் நடந்த மதக் கலவரத்தால் பாதிக்கப்பட்டோருக்கு விரைவில் நீதி கிடைக்க வேண்டும் என்றும், வன்முறைகளால் அனைத்தையும் இழந்தவர்களுக்கு அரசு விரைவில் மறு வாழ்வுக்கான வழிமுறைகளை அமைத்துத் தர வேண்டுமென்றும் இப்பேரணியில் கோரிக்கைகள் எழுப்பப் பட்டன.
பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றிய பல பெண்ணுரிமை ஆர்வலர்கள், மதங்களை பிரிக்கும் ஒரு கருவியாகப் பயன்படுத்தும் சக்திகளை இனம் கண்டு அவைகளை எதிர்க்க வேண்டுமென கேட்டுக் கொண்டனர். வன்முறைகள் என்று வரும் போது, பெண்களுக்கே உரிய மென்மையும், இரக்க குணங்களும் மறைந்து விடும் வண்ணம் தங்களைத் தூண்டி விடும் பிரிவினை சக்திகளை இந்த சமுதாயத்திலிருந்து முற்றிலும் அகற்ற வேண்டுமெனவும் அவர்கள் அங்கு கூடியிருந்தோரிடம் வேண்டுகோள் விடுத்தனர்.கந்தமால் போன்ற பகுதிகளில் பழங்குடியினர், தாழ்த்தப்பட்டோர் என்று சமூகத்தால் புறக்கணிக்கப் பட்டவர்களே அதிகம் இருப்பதால், சமூக அநீதிகளுக்கு இவர்கள் எளிதில் ஆளாகிறார்கள் என்று Namita Majhi என்ற பெண்ணுரிமை தலைவர் கூறினார்.







All the contents on this site are copyrighted ©.