2010-03-11 15:45:40

இளையோருக்கு நல்லதொரு எதிர்காலத்தை உருவாக்க Indoreல் எழுப்பப்படும்  கல்லூரி உதவும் - Indore மறைமாவட்ட ஆயர்


மார்ச்11,2010 இளையோர் இந்திய திருச்சபையின் சக்தி எனவே, அவர்களை உருவாக்குவதில் தனி கவனம் செலுத்துவது திருச்சபையின் முக்கிய பணி என்று Indore மறைமாவட்ட ஆயர் Chacko Thottumarickal கூறினார்.
மத்திய பிரதேசத்தில் ஆரம்பிக்கப்படவிருக்கும் கல்லூரி ஒன்றுக்கு அண்மையில் அடிக்கல் நாட்டும் போது ஆயர் இதைக் கூறினார்.
பழங்குடியினர் அதிகம் வாழும் Jhabua, Khandwa, Ujjain ஆகிய மறைமாவட்டங்களில் பள்ளிப் படிப்பை முடிக்கும் இளையோர் நல்லதொரு எதிர்காலத்தை உருவாக்க Indoreல் எழுப்பப்படும் இந்தக் கல்லூரி பல வழிகளில் உதவும் என்று ஆயர் கூறினார்.
அண்மையில் நிறைவுபெற்ற இந்திய ஆயர் பேரவையில், இளையோர் பணியில் இந்திய திருச்சபை தனி கவனம் செலுத்த வேண்டுமென மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தை செயல்படுத்தும் விதமாக இந்த கல்லூரி அமைகிறதென இந்திய ஆயர் பேரவையின் சமூகத் தொடர்பு பணிக் குழுவின் தலைவர் ஆயர் Thottumarickal கூறினார்.மேலாண்மை, கணணி, வர்த்தகம் ஆகிய துறைகளைக் கொண்ட இக்கல்லூரி, இவ்வாண்டு ஜூலை மாதம் முதல் செயல்படும் என்று செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.







All the contents on this site are copyrighted ©.