2010-03-10 15:28:04

புனித வெள்ளியன்று மது பானங்களின் விற்பனையைத் தடை செய்து வரும் அயர்லாந்தின் மரபு குறித்த விவாதம் அந்நாட்டில் ஏற்பட்டுள்ளது


மார்ச்10,2010 புனித வெள்ளியன்று மது பானங்களின் விற்பனையைத் தடை செய்து வரும் அயர்லாந்தின் மரபிலிருந்து அந்நாட்டின் Limerick நகரம் விதி விலக்குப் பெற முயற்சிப்பதைக் குறித்த விவாதம் அந்நாட்டில் ஏற்பட்டுள்ளது.
 புனித வெள்ளியன்று அந்த நகரத்தில் நடைபெறும் Rugby போட்டியின் காரணமாக, மது பானங்களை விற்பனை செய்ய தங்களை அனுமதிக்க வேண்டுமென மது விற்பனை நிறுவனங்கள் கேட்டுக் கொண்டதன் பேரில் இந்த விவாதம் ஆரம்பமாகியுள்ளது.
பணம், லாபம் என்ற கண்ணோட்டகளால் உந்தப்பட்டு இந்த விதி விலக்கைப் பெற விரும்பும் நிறுவனங்கள் புனித வெள்ளி போன்ற நாட்களின் தனிச் சிறப்பை உணரவேண்டுமென்றும், தகுந்த விவாதமின்றி இந்த விதி விலக்கு அளிக்கப்பட கூடாதென்றும் உலக மீட்பர் துறவு மட அதிபர் அருட்தந்தை Adrian Egan கூறியுள்ளார்.
புனித வெள்ளியன்று மதுபானக் கடைகள் மூடியிருக்க வேண்டுமென்றும், மக்களின் விளையாட்டு போட்டிகளில் மது தேவையற்ற ஒரு அம்சமென்றும் அயர்லாந்தின் சுயேட்சை நாடாளு மன்ற உறுப்பினர் Ronan Mullen கூறியுள்ளார்.புனித வெள்ளியன்றும், கிறிஸ்துமஸ் நாளன்றும் மதுக்கடைகள் திறக்கக் கூடாதெனும் தடை அயர்லாந்தில் 1927ஆம் ஆண்டிலிருந்து பழக்கத்தில் இருப்பது குறிப்பிடத் தக்கது.







All the contents on this site are copyrighted ©.