2010-03-10 15:25:10

இயேசு சபை குரு Matteo Ricci திருச்சபை மீதும், சீன மக்கள் மீதும் ஆழ்ந்த அன்பு கொண்டிருந்தார்திருத்தந்தை 


மார்ச்10,2010 இயேசு சபை குரு Matteo Ricci திருச்சபை மீதும், சீன மக்கள் மீதும் ஆழ்ந்த அன்பு கொண்டிருந்தார் என்று திருத்தந்தை 16ம் பெனெடிக்ட் கூறினார்.
Matteo Ricci இறந்ததன் 400ம் ஆண்டு அனுசரிக்கப்பட்டு வரும் இவ்வேளையில் அவர் பிறந்த மறைமாவட்டமான Macereta வில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றிற்கு தன் வாழ்த்துத் தந்தியை அனுப்பியுள்ள திருத்தந்தை இவ்வாறு கூறினார்.
திருத்தந்தையின் பெயரால் இவ்வாழ்த்துத் தந்தியை அனுப்பியுள்ள திருப்பீடச் செயலர் கர்தினால் Tarcisio Bertone, Matteo Ricciயின் கலாச்சாரம், அறிவியல் சார்ந்த பணிகளை உலகறியச் செய்யும் இது போன்ற கருத்தரங்கு முயற்சிகளைப் திருத்தந்தை பாராட்டுவதாகத் தெரிவித்தார்.Matteo Ricci 1610ஆம் ஆண்டு மே மாதம் 11 ஆம் தேதி இறந்ததும், வெளிநாட்டவர் எவரையும் சீனாவில் புதைக்கக் கூடாதெனும் மரபுக்கு ஒரு விதிவிலக்காக, இந்த இயேசு சபை குரு சீனாவில் ஆற்றிய அறிவார்ந்த பணிகளை அங்கீகரிக்கும் வகையில் அவரது உடலை சீனாவிலேயே அடக்கம் செய்வதற்கு சீன பேரரசர் ஒரு இடத்தை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.







All the contents on this site are copyrighted ©.