2010-03-10 15:26:05

2012ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளுக்கான தயாரிப்பில் இங்கிலாந்து திருச்சபை


மார்ச்10,2010 அண்மையில் நடந்து முடிந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை பல நாடுகள் போட்டிகளாகப் பார்க்கும் அதே வேளையில், இந்த போட்டிகள் மக்களை இணைக்கும் ஒரு வாய்ப்பாக கிறிஸ்தவ அமைப்புகள் கருதுகின்றன என்று இங்கிலாந்து கிறிஸ்தவ பிரதிநிதிகள் கூறியுள்ளனர்.
 2012ஆம் ஆண்டு ஒலிம்பிக் மற்றும் மாற்றுத்திறனுடையோருக்கான ஒலிம்பிக் போட்டிகளை நடத்த இருக்கும் இங்கிலாந்தில், 'தங்கத்திற்கும் மேலாக' (More Than Gold) என்ற மையக் கருத்துடன் இயங்கி வரும் ஒரு அமைப்பில் 350க்கும் அதிகமான பல கிறிஸ்தவ அமைப்புகள் இணைந்துள்ளன என்று இங்கிலாந்து, வேல்ஸ் ஆயர் பேரவையின்  ஒலிம்பிக் போட்டிகள் தொடர்பான கத்தோலிக்க அலுவலகம் தெரிவித்துள்ளது.
Vancouver ல் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்ற இரு திடல்களுக்கு அருகே Vancouver உயர் மறைமாவட்டத்தின் முயற்சியால் செபம் செய்வதற்கென அமைக்கப்பட்டிருந்த இடங்களில் வீரர்களும், பார்வையாளர்களும் கலந்து கொண்டு செபங்கள், தியானங்கள் செய்தது பலரையும் உற்சாகப்படுத்துவதாக இருந்ததென Vancouver பேராயர் Micheal Miller கூறினார்.
வரும் 2012 ஒலிம்பிக் போட்டிகளின் நேரத்தில் இங்கிலாந்திலும் இது போன்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதற்கு வழி வகுத்துள்ளன என்று ‘தங்கத்திற்கும் மேலாக’ என்ற அமைப்பின் அங்கத்தினர் ஒருவர் கூறினார்.
More Than Gold என்ற இந்த முயற்சியானது முதன் முறையாக 1996ஆம் ஆண்டு நடைபெற்ற Atlanta ஒலிம்பிக் போட்டிகளின் நேரத்தில் ஆரம்பிக்கப்பட்டதென்பதும் அதன் பின் நடந்த பல Commonwealth, Pan Am மற்றும் ஒலிம்பிக் போட்டிகளில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதென்பதும் குறிப்பிடத் தக்கது.







All the contents on this site are copyrighted ©.