2010-03-09 15:56:40

மத்திய பிரதேசத்தின் பள்ளிகள் அனைத்திலும் எல்லா மதங்களைக் குறித்தும் கற்பிக்க வேண்டும் என போபால் பேராயர் அழைப்பு


மார்ச்09,2010 மத்திய பிரதேசத்தின் பள்ளிகள் அனைத்திலும் எல்லா மதங்களைக் குறித்தும் கற்பிக்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார் போபால் பேராயர் லியோ கொர்னேலியோ.

மத்திய பிரதேச கல்வி பாடத்திட்டத்தில் இந்து மதத்தின் பகவத்கீதை குறித்த பாடங்களை இணைக்க அரசு திட்டமிட்டுள்ளதைப் பற்றித் தன் கருத்துக்களை எடுத்துரைத்த பேராயர், ஒரு மதத்தின் புத்தகங்களை மட்டுமல்ல, அனைத்து மதங்களின் நூல்களையும் குறித்து கற்பிப்பது சிறப்பு என்றார்.

ஒருமதத்தின் போதனைகளை எடுத்துரைப்பதற்குத் தலத்திருச்சபை எதிரி அல்ல, மாறாக அனைத்து மதங்களுக்கும் உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும் என்பதையே நாங்கள் வலியுறுத்துகிறோம் என்றார் பேராயர் கொர்னேலியோ.

மாணவர்களில் நல்ல மதிப்பீடுகளில் நல்ல மதிப்பீடுகளை வேரூன்றச் செய்ய அனைத்து மதங்களின் புனித நூல்களைக் கற்பிப்பதன் மூலம் உதவ முடியும் எனவும் போபால் பேராயர் கூறினார்.








All the contents on this site are copyrighted ©.