2010-03-09 16:00:10

சிறைக்கைதிகளின் வாழ்க்கை தர மேம்பாட்டிற்கு அழைப்பு விடுக்கிறார் ஜிம்பாவே பேராயர்.


மார்ச் 09,2010. ஜிம்பாவே நாட்டில் சிறை வைக்கப்பட்டிருக்கும் கைதிகளின் வாழ்க்கை தரம் குறித்து தன் தவக்கால மேய்ப்புப் பணிச் சுற்றறிக்கையில் கவலையை வெளியிட்டுள்ளார் அந்நாட்டுப் பேராயர் Robert C Ndlovu.

சிறைக்கைதிகள் அடைத்துவைக்கப்பட்டிருக்கும் நிலைகள் மிகவும் கீழ்த்தரமானவைகளாக இருப்பதாக உரைத்த ஹராரே பேராயர், கடந்த ஆண்டில் புனித வின்சென்ட் தெ பால் சபையின் உதவியுடன் சிறைக்கைதிகளுக்கு போர்வைகள், சமையல் எண்ணெய், சவக்காரம், மருந்துகள், உணவுப்பொருட்கள் போன்றவைகளை வழங்கியதையும் தன் செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஹராரேயின் 5 சிறைகளில் உள்ள காய்கறித் தோட்டங்களுக்குத் தேவையான அனைத்தையும் வழங்கி, சிறைக் கைதிகளுக்கான காய்கறி உற்பத்திக்கு தலத் திருச்சபை உதவியுள்ளதையும் எடுத்துரைத்துள்ள பேராயர் C Ndlovu, அதற்கு முந்தைய காலங்களில் பல சிறைக்கைதிகள் எவ்வித பராமரிப்பும் இன்றி நோயாலும் பசியாலும் உயிரிழந்து வந்ததையும் சுட்டிக்காட்டியுள்ளார்.








All the contents on this site are copyrighted ©.