2010-03-09 15:44:24

கடந்த 15 ஆண்டுகளில் பெண்களில் நிலைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணப்பட்டுள்ளது - பேராயர் மிலியோரே


மார்ச்09,2010 கடந்த 15 ஆண்டுகளில் பெண்களில் நிலைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணப்பட்டுள்ளதாகத் தனது மகிழ்ச்சியை வெளியிட்டார் ஐ.நா.விற்கான திருப்பீடத்தின் நிரந்தரப்பார்வையாளர் பேராயர் செலஸ்தினோ மிலியோரே.

“21ம் நூற்றாண்டில் அமைதி, வளர்ச்சி மற்றும் பாலின சரிநிகர்தன்மை” என்ற தலைப்பில் ஐ.நா.வில் இடம் பெற்ற கூட்டத்தில் உரையாற்றிய திருப்பீட பிரதிநிதி, அண்மைக் காலங்களில் பெண்களின் கல்வி, ஏழ்மையை அகற்றுவதில் பெண்களின் பங்கேற்பு, பாலின பாகுபாட்டுடன் நடத்தப்படலை அகற்றல், சமூக வாழ்வில் பங்கேற்பு, வீட்டு வன்முறைககளுக்கு எதிரான சட்டங்கள் போன்றவைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணப்பட்டுள்ளதைச் சுட்டிககாட்டினார்.

இருப்பினும் பெண் சிசுக்களைக் கொல்லுதல், பெண்குழந்தைகள் அதிக அளவில் பள்ளிகளிலிருந்து கல்வியைத் தொடராமல் வெளியேறுதல், ஆசியா, இலத்தீன் அமெரிக்கா மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் ஹைய்சைய்வி நோய்க் கிருமிகளால் பாதிக்கப்பட்டுள்ள பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு போன்றவைகளையும் சுட்டிககாட்டி கவலையை வெளியிட்டார் பேராயர் மிலியோரே.

கல்வி, வேலைவாய்ப்பு, சட்டப்பாதுகாப்பு, சமூக மற்றும் அரசியல் உரிமைகள் பெறுதல் போன்றவைகளில் இருபாலினருக்கும் சரிசமமான உரிமைகள் வழங்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிககாட்டினார் ஐ.நா.விற்கான திருப்பீடத்தின் நிரந்தரப்பார்வையாளர் பேராயர் செலஸ்தினோ மிலியோரே.








All the contents on this site are copyrighted ©.