2010-03-08 16:17:52

யாழ்ப்பாண மறைமாவட்டத்தில் குடியேறியுள்ள போர்க்கால அகதிகளுக்கு நிவாரண உதவிகளை வழங்கினர் இலங்கை கத்தோலிக்க ஆயர்கள்


மார்ச்08,2010 யாழ்ப்பாண மறைமாவட்டத்தில் மீண்டும் குடியேறியுள்ள போர்க்கால அகதிகளைப் பார்வையிட்டு நிவாரண உதவிகளை வழங்கினர் இலங்கை கத்தோலிக்க ஆயர்கள்.

இலங்கை ஆயர் பேரவைத் தலைவர் ஆயர் Vianney Fenanado நீதி மற்றும் அமைதி ஆணையத் தலைவர் ஆயர் Harold Anthony Perrera உள்ளிட்ட ஆறு ஆயர்கள் அடங்கிய குழு, Kilinochi, Mulangavil, Vidaltalitivu, Iranamadhu மற்றும் Kiran பகுதிகளைப் பார்வையிட்டனர்.

இரண்டு சக்கர வாகனங்கள், விளக்குகள், ஆடைகள், பள்ளிச் சிறார்க்குத் தேவையான பொருட்கள் என ஏறத்தாழ 35 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை வழங்கினர்.

இந்த ஆயர்களிடம் பேசிய தமிழ் அகதிகள், போர்க் காலத்தில் தாங்கள் இழந்த மீன்பிடி படகுகள் மற்றும் வேளாண்மைக் கருவிகளைப் பெற விரும்புவதாகத் தெரிவித்தனர்.

தங்கள் கிராமங்களுக்குத் திரும்பியுள்ள சுமார் இரண்டு லட்சம் போர்க்கால அகதிகளின் வீடுகளில் 90 விழுக்காடு அழிக்கப்பட்டுள்ளன. இன்னும் பல அகதிகள் மறுவாழ்வு முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர்.








All the contents on this site are copyrighted ©.