2010-03-08 16:18:44

மியான்மாரில் அமைதி ஏற்படுவதற்கென உலகளாவிய கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரம்


மார்ச்08,2010 மியான்மாரில் அமைதியும், நீதியான அரசியல் மாற்றமும் ஏற்படுவதற்கென உலகளாவிய கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரம் Westminsterல் உள்ள எம்மானுவேல் மையத்தில் இந்த வாரம் அனுசரிக்கப்படுகிறது.

மார்ச் 13 சனிக்கிழமை வரை நடைபெற உள்ள இந்த ஒரு வார நிகழ்வுகளில் கலந்துரையாடல்கள், செபங்கள், ஆகியவை இடம் பெறும் என்று செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.

மியான்மாரின் அரசியல் நெருக்கடிகளால் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளவர்கள், வெளியேற்றப்பட்டவர்கள் பலரும் ஒன்று சேர்ந்துள்ள இந்த நிகழ்வில் Htooku Hsarsay என்பவர் அந்த நாட்டில் மக்கள் சந்திக்கும் சவால்களைப் பற்றி எடுத்துக் கூறுவார் என்று இச்செய்திக் குறிப்பு மேலும் கூறுகிறது.

மியான்மாரில் மக்களாட்சி ஏற்பட பலவகையிலும் போராடி வருபவரும், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருமான Aung San Suu Kyiன் முயற்சியால் 1997ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட மியான்மாருக்கான உலக பிரார்த்தனை நாள், இன்று உலகின் பல இடங்களிலும் மியான்மாரில் நிரந்தர அமைதி நிலவுவதர்காகப் பலராலும் அனுசரிக்கப்பட்டு வருகின்றது.

தேர்தல்கள் என்ற பெயரில், இவ்வாண்டு மியான்மாரில் நடத்தப் பெறும் முயற்சிகளால், இப்போதுள்ள அரசு மீண்டும் ஆட்சி அமைக்க முயன்றாலும், செபத்தில் இணைவதால் நல்ல மாற்றங்களை உருவாக்க முடியும் என்று இந்த செப வாரத்தை ஏற்பாடு செய்துள்ள Benedict Rogers கூறினார்.








All the contents on this site are copyrighted ©.