2010-03-06 15:25:10

சிலே நாட்டுக்கு, கத்தோலிக்கத் திருச்சபை செய்து வரும் இடர்துடைப்புப் பணிகளுக்கு அரசுத்தலைவர் நன்றி


மார்ச்06,2010 தொடர் நிலநடுக்கங்களால் பாதிக்கப்பட்டுள்ள சிலே நாட்டுக்கு, கத்தோலிக்கத் திருச்சபை செய்து வரும் இடர்துடைப்புப் பணிகளுக்கு நன்றி தெரிவித்துள்ளார் அந்நாட்டு அரசுத்தலைவர் Michelle Bachelet.

சந்தியாகோ பேராயர் கர்தினால் பிரான்சிஸ்கோ ஹாவியர் எராசுரிஸ் மற்றும் ஆயர் கோய்ச்சுடன் கூட்டம் நடத்திய அரசுத்தலைவர் Bachelet, நாடு துன்பத்தை எதிர்நோக்கி வரும் இவ்வேளையில் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுணர்வின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

கத்தோலிக்கத் திருச்சபை எப்பொழுதும் பலவழிகளில் ஒத்துழைப்பு கொடுத்து சேவையாற்றுகின்றது என்றும் அரசுத்தலைவர் பாராட்டினார்.

மேலும், துன்புறும் சிலே மக்களுடனான ஒருமைப்பாட்டையும் செபத்தையும் தெரிவிக்கும் செய்தியை திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அந்நாட்டிற்கு அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சிலேயின் 27 மறைமாவட்டங்களில் எட்டு, நிலநடுக்கங்களால் பாதிக்கப்பட்டுள்ளன மற்றும் 5 இலட்சத்துக்கு மேற்பட்டோர் இடம் பெயர்ந்துள்ளனர்.








All the contents on this site are copyrighted ©.