2010-03-06 15:19:29

கிறிஸ்தவ தலித்துக்களின் உரிமைகளுக்காக பேரணி நடத்திய ஆயர்கள் உட்பட பலர் கைது செய்யப்பட்டுப் பின்னர் விடுதலை செய்யப்பட்டனர்


மார்ச்06,2010 கிறிஸ்தவ தலித் மக்களின் உரிமைகளுக்காக நீண்ட பேரணி நடத்திய தமிழக ஆயர்கள், குருக்கள், அருட்சகோதரிகள் மற்றும் பொதுநிலை கத்தோலிக்கர் பலரை இவ்வெள்ளியன்று கைது செய்த காவல்துறை, நான்கு மணி நேரத்திற்குப் பின்னர் விடுதலை செய்துள்ளது.

இச்சம்பவம் குறித்து பேசிய இந்திய ஆயர் பேரவையின் பிற்படுத்தப்பட்டோர் ஆணையச் செயலர் அருட்பணி காஸ்மன் ஆரோக்யசாமி, நியாயமான ஜனநாயகப் போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் நடத்தப்பட்ட விதம் குறித்து மாநில மற்றும் மத்திய அரசைக் குறை கூறினார்.

கன்னியாகுமரியிலிருந்து சென்னை வரை மேற்கொள்ளப்பட்ட ஒருமாத நீண்ட பேரணி, இவ்வெள்ளியன்று சென்னையில் நிறைவடைவதாகவும் இறுதியில் கண்டனப் பொதுக்கூட்டம் ஒன்று நடைபெறுவதாகவும் திட்டமிடப்பட்டிருந்தது.

எனினும், செங்கல்பட்டு ஆயர் நீதிநாதன், சென்னை மயிலைப் பேராயர் மலையப்பன் சின்னப்பா, மதுரைப் பேராயர் பீட்டர் பெர்னாண்டோ உட்பட அருட்பணியாளர்கள், அருட்சகோதரிகள் மற்றும் பொதுநிலை கத்தோலிக்கர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து பொதுக் கூட்டம் இரத்து செய்யப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.








All the contents on this site are copyrighted ©.