2010-03-05 14:45:57

மிகப்பழங்காலத்தில் உயிர் வாழ்ந்ததாக நம்பப்படும் டைனோசரை ஒத்த உயிரினமொன்றின் எலும்புகளை விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு


மார்ச்05,2010 மிகப்பழங்காலத்தில் உயிர் வாழ்ந்ததாக நம்பப்படும் டைனோசரை ஒத்த உயிரினமொன்றின் எலும்புகளை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த எலும்புகள், முன்னர் டைனோசர் என அடையாளப்படுத்தப்பட்டுள்ள உயிரினத்தின் காலத்திற்கும் சுமார் 10 மில்லியன் வருடங்களுக்கு முந்திய காலத்துக்குரியது என கருதப்படுகின்றது.

டான்சானியாவில் இந்த புதைபடிவ எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இந்த உயிரினம் இருநூற்று நாற்பது மில்லியன் வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்திருக்கலாம் என்று ஆய்வுகள் கூறுகின்றன.








All the contents on this site are copyrighted ©.