2010-03-05 16:10:46

மார்ச் 6 தவக்காலச் சிந்தனை


RealAudioMP3 இயேசு போதித்த உவமைகளில் கிறிஸ்தவர்களாகிய நம்மைப் பாதித்த ஒருசில உவமைகளில் அதிகம் பாதித்த உவமைகளுள் ஒன்றுதான் ஊதாரி மைந்தனின் உவமை.

இந்த உவமையில் வரும் அப்பா, நல்ல பெயர் சொல்லக்கூடிய மூத்த மகன், பொறுப்பற்ற ஊதாரியான இளைய மகன், வேற்று நாட்டு குடிமக்களில் ஊதாரி மகனுக்கு வேலை தந்தவர், மனமாறிய இளைய மக, பணியாளர்கள் என அனைத்து ஆட்களுமே நம் ஒவ்வொருவரிலும் இருக்கிறார்கள் இன்றைய. தினம் இந்த ஆட்களில் எனக்குள் மேலோங்கி இருப்பவர் யார் என உள்தேடல் மேற்கொள்வது நமக்கு நலம் பயக்கலாம்.

மனம் வருந்தி வரும் மகனை கட்டித் தழுவிக் கொண்டதோடு மூத்த மகனையும் தன் நிலையைப் புரிந்து கொள்ள அழைக்கும் அப்பாவைப் போல நீ இருக்கிறாயா?

ஊதாரி வாழ்வு வாழ்ந்த இளைய மகனைப் போல உன் வாழ்வு இன்றும் உள்ளதா

மனம் வருந்தி தந்தையின் இல்லம் திரும்பிய இளையவன் உன்னில் மோலோங்கி இருக்கிறானா?

பிறர்துன்பம் கண்டு உதவிய வேற்று நாட்டு குடிமகனின் உணர்வு உன்னில் உயிர் கொண்டுள்ளதா?

மனம் திருந்தியவர் இல்லம் திரும்பிய போது மகிழ்ந்த பணியாளரின் பாசம் போன்று உனக்குள் தாய்மை உணர்வு உள்ளதா?

தந்தையின் அளப்பரிய பாசத்தையும் ஊதாரித் தம்பியின் மனமாற்றத்தையும் புரிந்து கொள்ள முடியாமல் தவிக்கும் நல்ல மூத்த மகனைப் போன்று நீ உள்ளாயா?

உனக்குள் மோலோங்கி இருக்கும் அந்த ஒருவர் யார்!.(எழுதி வழங்கியவர் அ.பணி.பவுல்ராஜ் சே.ச)








All the contents on this site are copyrighted ©.