2010-03-05 14:44:43

உலகப் பொருளாதாரத்தை நிர்வகிப்பதில் சமத்துவமும் நீதியும் இன்றியமையாத கூறுகள்- பேராயர் தொமாசி


மார்ச்05,2010 உலகப் பொருளாதாரத்தை நிர்வகிப்பதில் சமத்துவமும் நீதியும் இன்றியமையாத கூறுகள் என்று, ஜெனீவாவிலுள்ள ஐ.நா.அலுவலகங்களுக்கான திரு்பபீடத்தின் நிரந்தரப் பார்வையாளர் பேராயர் சில்வானோ தொமாசி (Silvano Tomasi) கூறினார்.

ஜெனீவாவில் நடைபெற்றுவரும் ஐ.நா.வின் மனித உரிமைகள் அமைப்பின் ஒருமாதக் கூட்டத்தில் உரையாற்றிய பேராயர் தொமாசி இவ்வாறு கூறினார்.

நாடுகள், மனித உரிமைகள் குறித்த கொள்கைகளைச் சட்டமாகக் கொண்டு வந்து, அடித்தட்டு நிலையிலிருந்து மாற்றங்களைச் செயல்படுத்தினால் மட்டுமே, குடிமக்கள் மனித உரிமைகளை அனுபவிக்க முடியும் என்றும் பேராயர் தெரிவித்தார்.

தற்போதைய பொருளாதார நெருக்கடிகளின் எதிர்மறைவிளைவுகள் பற்றியும் சுட்டிக்காட்டிய அவர், பொருளாதார நடவடிக்கைகள், செல்வத்தைத் திரட்டும் கருவி என்று மட்டும் நோக்கப்படக் கூடாது, அத்துடன் அவை அரசியல் செயல்பாட்டிலிருந்து பிரித்து இயங்க வேண்டும் என்றும் பரிந்துரைத்தார்.








All the contents on this site are copyrighted ©.