2010-03-05 14:45:16

இலங்கையின் போர்க் குற்ற விசாரணைகளுக்கு மீண்டும் ஐ.நா. வலியுறுத்தல்


மார்ச் 05,2010 இலங்கையில் இடம்பெற்று வரும் மனித உரிமை மீறல்கள், அந்நாட்டின் 25 ஆண்டுகளுக்குப் பின்னான ஒப்புரவு முயற்சிகளைப் பாதிக்கின்றது என்று, மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் ஆணையாளர் நவநீதம்பிள்ளை குறைகூறினார்.

ஜெனீவாவில் இத்திங்களன்று தொடங்கியுள்ள ஐ.நா.வின் மனித உரிமைகள் அமைப்பின் ஒருமாதக் கூட்டத்தில் இவ்வியாழனன்று அறிக்கை சமர்ப்பித்து உரையாற்றிய நவநீதம்பிள்ளை இவ்வாறு கூறினார்.

இலங்கையில் போரின் போது இரண்டு தரப்பினரும் மேற்கொண்ட பெரும் மனித உரிமை மீறல்கள் குறித்து தனிப்பட்ட விசாரணைகள் நடத்தப்பட வேண்டும், இதற்கு இலங்கை அரசு இணங்கவேண்டும், இதற்கு சர்வதேச நாடுகள் உதவி செய்ய முடியும் எனவும் நவநீதம்பிள்ளை குறிப்பிட்டார்.

மேலும், இரானில் மனித உரிமைகளின் நிலை மிகவும் மோசமாக இருப்பதாகவும், ஐ.நா.வின் மனித உரிமைகள் அமைப்பின் பிரதிநிதிகள் அந்நாட்டைப் பார்வையிட வேண்டும் என்றும் தனது அறிக்கையில் குறிப்பிட்டார் நவநீதம்பிள்ளை.








All the contents on this site are copyrighted ©.