2010-03-05 14:45:27

அரசியல் அமைப்பில் செய்யப்படும் எந்தவொரு சீர்திருத்தமும், தனிப்பட்ட குழுக்களுக்கு ஆதரவாக இருக்கக்கூடாது - புர்க்கினா ஃபாசோ ஆயர்கள்


மார்ச்05,2010 அரசியல் அமைப்பில் செய்யப்படும் எந்தவொரு சீர்திருத்தமும், தனிப்பட்ட குழுக்களுக்கு ஆதரவாக இல்லாமல், பொதுநலம், அமைதி, சமூகநீதி ஆகியவற்றின் அடிப்படையில் இடம் பெற வேண்டும் என்று புர்க்கினா ஃபாசோ (BURKINA FASO) ஆயர்கள் கூறியுள்ளனர்.

புர்க்கினா ஃபாசோ அரசியல் அமைப்பில் 2002ம் ஆண்டில் இடம் பெற்ற மாற்றங்களின்படி, அரசுத்தலைவரின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள். அது மீண்டும் ஒருமுறை புதுப்பிக்கப்படலாம். ஆயினும் அரசுத்தலைவர் மூன்றாம் முறையாக ஆட்சியில் இருப்பதற்கு வழிஅமைக்கும் விதமாக, அரசியல் அமைப்பில் சீர்திருத்தம் கொண்டுவருவதற்குத் தற்போதைய ஆளும் கட்சி முயற்சித்து வருகிறது.

ஆப்ரிக்க நாடான புர்க்கினா ஃபாசோவில் வருகிற நவம்பர் 21ம் தேதி பொதுத் தேர்தல்கள் நடைபெறவிருப்பதை முன்னிட்டு அரசு இம்முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இது குறித்து அந்நாட்டு ஆயர்களும் தங்களது கருத்தை வெளியிட்டுள்ளனர்.








All the contents on this site are copyrighted ©.