2010-03-04 15:12:27

பெண்களுக்குரிய உரிமைகளும் சம நிலையும் வழங்கப்படவில்லையென .நா.வின் தலைமைச் செயலர் Ban Ki-moon  தெரிவித்துள்ளார்


மார்ச்04,2010 பெண்களுக்கெதிரான பாகுபாடுகளை நீக்கி அவர்களுக்கு சம உரிமைகள் வழங்கப்படுவது அவசியம் என்று அனைத்து உலகத் தலைவர்களும் சம்மதம் தெரிவித்து பத்து ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் பெண்களுக்குரிய உரிமைகளும் சம நிலையும் வழங்கப்படவில்லையென ஐ.நா.வின் தலைமைச் செயலர் Ban Ki-moon  தெரிவித்துள்ளார்.
மார்ச் மாதம் 8ஆம் தேதி கடைபிடிக்கப்படும் அகில உலக பெண்கள் தினத்தை முன்னிட்டு பெண்களின் இன்றைய நிலை குறித்த ஐ.நா.வின் குழு ஒன்றுடன் நடத்திய கலந்துரையாடலில் Ban Ki-moon இவ்வாறு கூறினார்.
1995ஆம் ஆண்டு Beijing ல் பெண்கள் முன்னேற்றம் குறித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பெண்களுக்கும், ஒட்டுமொத்த மனித சமுதாயத்திற்கும் தேவையான முன்னேற்றப் பாதை என்றும், அந்தத் தீர்மானங்களை நிறைவேற்றினால், உலக முன்னேற்றம் இன்னும் சீரடையும் என்றும் Ban Ki-moon  கூறினார்.ஐ.நா. அலுவலகத்தின் பல முக்கியப் பொறுப்புகளில் பெண்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றும், கடந்த ஒரு சில ஆண்டுகளில் ஐ.நா.வின் வரலாற்றில் இதுவரைக் கண்டிராத வண்ணம் 40 விழுக்காட்டிற்கும் மேலாகப் பெண்கள் நியமனம் பெற்றுள்ளனர் என்றும் கூறிய தலைமைச் செயலர், இந்த முயற்சிகள் இன்னும் முழு மூச்சில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.







All the contents on this site are copyrighted ©.