2010-03-04 15:11:34

நிலநடுக்கத்தின் பாதிப்புகளையும்கட்டுமானப் பணிகளையும் பார்வையிட அமெரிக்க ஆயர் பேரவையின் பிரதிநிதிகள்  ஹெயிட்டியில் மேற்கொண்ட பயணம் 


மார்ச்04,2010 ஹெயிட்டியின் நிலநடுக்கத்தின் பாதிப்புகளையும், அங்கு மேற்கொள்ளப் பட்டுள்ள கட்டுமானப் பணிகளையும் பார்வையிட அமெரிக்க ஆயர் பேரவையின் பிரதிநிதிகள் கடந்த மூன்று நாட்களாக ஹெயிட்டியில் மேற்கொண்ட பயணம்   இவ்வியாழனன்று முடிவடைந்துள்ளது.
ஹெயிட்டியின் பாதிப்புகளை நேரடியாகக் கண்டறியவும், அந்நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் முயற்சிகளில் அமேரிக்கா இன்னும் எவ்வகையில் உதவ முடியும் என்பதை அமெரிக்க ஆயர் பேரவைக்கு எடுத்துரைக்கவும் இந்த பயணம் உதவியாக இருந்ததென San Antonio உயர் மறைமாவட்ட பேராயர் Jose H.Gomez செய்தியாளர்களிடம் கூறினார்.இந்த நிலநடுக்கத்தில் பேராயரையும், பேராலயம் உட்பட பல ஆலயங்களையும் இழந்துள்ளது இந்தத் தலத் திருச்சபையில் ஒரு வெற்றிடத்தை உருவாக்கியுள்ளது என்று கூறிய பேராயர் Gomez, மக்களின் உதவிகள், செபங்கள், உழைப்பு இவைகளின் வழியே மீண்டும் இந்தத் தலத்திருச்சபை புதுப்பிக்கப்படும் என்பதில் தன் நம்பிக்கையைத் தெரிவித்தார்.







All the contents on this site are copyrighted ©.