2010-03-03 15:15:22

திருத்தந்தையின் புதன் பொது மறைபோதகம்


RealAudioMP3 மார்ச்-03. தன் புதன் பொது மறைபோதகங்களில் மத்திய காலத்தின் கிறிஸ்தவக் கலாச்சாரம் குறித்து மக்களுடன் கருத்துக்களைப் பகிர்ந்து வரும் திருத்தந்தை 16ம் பெனெடிக்ட், இவ்வாரம் புனித Bonaventure குறித்து உரை வழங்கினார்.

புனித பிரான்சிஸ் அசிசியைத் துவக்க காலத்திலேயே பின்பற்றியவர்களுள் ஒருவரான புனித Bonaventure,  குறிப்பிடத்தக்க இறையியலாளராகவும், பாரிஸ் பல்கலை கழகத்தின் ஆசிரியராகவும் இருந்தார்.

பிரன்சிஸ்கன் மற்றும் தொமினிக்கன் என்ற புதிய இரந்துண்ணும் சபைகளின் துறவற தனி வரத்தின் உண்மைத் தன்மை குறித்த கேள்விகளை எழுப்பிய முரண்பட்ட கருத்துக்களின் காலத்தின் போது, அச்சபைகளின் சார்பாகக் கருத்துக்களை வழங்க புனித Bonaventure அழைக்கப்பட்டார். ஏழ்மை, கற்பு மற்றும் கீழ்ப்படிதல் ஆகிய நற்செய்தி ஆலோசனைகளைக் கொண்டு வாழ்வில் நடைமுறைப்படுத்துவதன் வழி இயேசுவைப் பின்பற்றும் துறவற வாழ்வின் உண்மை வடிவத்தின் பிரதிநிதியாகத் துறவிகள் உள்ளனர் என விளக்கமளித்தார் புனித Bonaventure. பிரான்சிஸ்கன் துறவு சபையின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், பிரான்சிஸ்கன் தனி வரத்தின் உண்மை தன்மை குறித்த வாதங்களுடன் அத்துறவு சபை மேலும்  மேலும் பரந்து விரிந்து வந்த காலத்தில் 17 ஆண்டுகள் அச்சபைத் தலைவராகச் செயல்பட்டார். அவரின் ஞானமும் வழி காட்டுதலும் ஒரு புதிய வாழ்வு முறையை ஏற்கத் தூண்டியது. பிரான்சிஸ் அசிசி குறித்து இவர் எழுதிய வாழ்க்கைச் சரித்திரம்,   கிறிஸ்துவை நெருங்கிப் பின்பற்றுபவராக அசிசியை காட்டியது.

மேலே கூறப்பட்ட இவ்விரண்டும் பிரான்சிஸ்கன் துறவு சபையின் தனி வரத்தை வடிவமைப்பதில் பெரும்பங்காற்றின. ஆயராக அறிவிக்கப்பட்டு பின்னர் கர்தினாலாகவும் உயர்த்தப்பட்ட புனித Bonaventure, Lyon பொதுச்சங்கம் நடந்து கொண்டிருந்த போது காலமானார்.

RealAudioMP3 இயேசுவின் மீதான ஆழ்ந்த அன்பு, கடவுளைக் காண்பதற்கான மறைபொருளான  ஏக்கம், மற்றும் நம் வானக இல்லத்தின் மகிழ்வு ஆகியவைகளால் ஊடுருவப்பட்டிருக்கும் ஞானத்தின் வெளிப்பாடான இவரின் எழுத்துக்கள் இன்றும் நமக்குத் தூண்டுதல்களாக உள்ளன என தன் புதன் பொது மறைபோதகத்தை வழங்கிய திருத்தந்தை அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.

RealAudioMP3







All the contents on this site are copyrighted ©.