2010-03-03 15:19:50

இத்தாலிய பள்ளிகளில் சிலுவைகள் தொடர்ந்து வைக்கப்படலாம் - ஐரோப்பிய நீதிமன்றம் தீர்ப்பளித்தது


மார்ச்03,2010 இத்தாலிய பள்ளிகளின் வகுப்பறைகளில் வைக்கப்பட்டுள்ள  சிலுவைகள் அகற்றப்படக் கூடாதென இத்தாலிய அரசு மேல் முறையீடு செய்ததை ஆதரித்து, இத்தாலிய பள்ளிகளில் சிலுவைகள் தொடர்ந்து வைக்கப்படலாம் என்று ஐரோப்பிய நீதிமன்றம் இச்செவ்வாயன்று தீர்ப்பளித்தது.
இந்தத் தீர்ப்பு தனக்கும் மற்ற ஆயர்களுக்கும் அதிக மன நிறைவைத் தருகிறதென ஐரோப்பிய ஆயர் பேரவைகள் ஒன்றியத்தின் தலைவர் கர்தினால் Péter Erdo கூறியுள்ளார்.
 2009ஆம் ஆண்டு நவம்பர் மாதம் Soile Lautsi என்பவற்றின் குடும்பத்தினர் தொடுத்த ஒரு வழக்கின் பேரில் ஐரோப்பிய நீதி மன்றம் இத்தாலியப் பள்ளிகளின் வகுப்பறைகளில் உள்ள சிலுவைகள் நீக்கப்பட வேண்டுமென தீர்ப்பு வழங்கியதை அடுத்து, இத்தாலிய அரசு அந்தத் தீர்ப்புக்கு எதிராக மேல் முறையீடு செய்திருந்தது என்பதும், அந்த மேல் முறையீடு குறித்த தீர்ப்பு இத்தாலிய அரசின் சார்பில் அளிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.சிலுவைகளை அகற்ற வேண்டுமெனும் தீர்ப்பு, நாட்டின் பாரம்பரியத்திற்கு எதிரானதென இத்தாலிய அரசுடன் வத்திக்கானும் சேர்ந்து குரல் எழுப்பியதென்றும், அண்மையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் 47 நாடுகளின் உறுப்பினர்கள் கலந்து கொண்ட ஒரு கூட்டத்தில் ஐரோப்பிய நீதி மன்றம் ஒரு நாட்டின் பாரம்பரிய கலாச்சாரம் குறித்த விவகாரங்களிலிருந்து விலகி இருப்பதே நல்லதேனும் முடிவு  எடுக்கப்பட்டதென்றும் செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.







All the contents on this site are copyrighted ©.