2010-03-02 15:19:40

கர்தினால் கிராசியாஸ் : இளையோர் அமைதியைக் கட்டி எழுப்புகிறவர்களாகத் திகழ வேண்டும்


மார்ச்02,2010 மேலும், இந்த ஆயர்கள் கூட்டத்தின் ஒரு கட்டமாக, அப்பகுதியின் 15 மறைமாவட்டங்களின் பிரதிநிதிகளோடு ஞாயிறன்று குவஹாட்டியில் திருப்பலி நிகழ்த்திய கர்தினால் கிராசியாஸ், இளையோர் அமைதியைக் கட்டி எழுப்புகிறவர்களாகத் திகழ வேண்டும் என்றார்.

வடகிழக்கு இந்திய இளையோர் இயேசுவில் ஆழமாக வேரூன்றி, அவரிடமிருந்து சக்தியைப் பெற்று, செபம், இறைவார்த்தை மற்றும் திருவருட்சாதனங்களால் மாற்றம் பெறுமாறும் வலியுறுத்தினார் கர்தினால் கிராசியாஸ்.

நல்லிணக்கம், நீதி, நேர்மை, பிறர்மீது தன்னலமற்ற கரிசனை குறிப்பாக ஏழைகள் மீது அக்கறை ஆகிய விழுமியங்களைப் பரப்பவும், அமைதியைக் கட்டி எழுப்பவும் இளையோர் உழைக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.

திருச்சபையின் மாபெரும் பலமாக இருக்கும் இப்பகுதி இளையோர், வடகிழக்கு இந்திய மக்களுக்கு மட்டுமல்ல, நாட்டின் பிறபகுதிகளில் வாழும் அனைவருக்கும் வழிகாட்டிகளாகத் திகழ முடியும் என்றும் கர்தினால் கிராசியாஸ் உரைத்தார்.

வடகிழக்கு இந்தியாவில் உழைத்த மறைபோதகர்களுக்குத் தனது நன்றியையும் பாராட்டையும் இந்திய ஆயர் பேரவையின் புதிய தலைவர் தெரிவித்தார்







All the contents on this site are copyrighted ©.