2010-03-01 15:55:49

மார்ச் 02 தவக்கால சிந்தனை


RealAudioMP3 யாவே கடவுள் முதல் வாசகத்தில் சமயச் சடங்குகளை எதிர்க்கிறார். தனக்கு அளிக்கும் காணிக்கைகள் பலனளிக்க வேண்டுமென்றால், நமது எண்ணங்களில் தூய்மையும், சொற்களில் நேர்மையும், செயல்களில் பிறரன்பும் வெளிப்பட வேண்டும் என்கிறார்.

நாங்கள் சொல்வதைச் செய்வோம்; செய்வதைச் சொல்வோம் என்று கூறிவிட்டு சொல்வதைச் செய்யாமல் வாழும் அன்றைய, இன்றைய பரிசேயக் கூட்டத்தைக் கடுமையாகச் சாடுகிறார் இயேசு. அவர்களது வெளிவேடத்தை, தற்பெருமையை, தலைகனத்தை வன்மையாக எதிர்க்கிறார். தந்தையாகிய கடவுளின் உண்மை அன்பை முழுமையாகச் சுவைப்பதற்கு அவரது சீடர்களை அன்போடு அழைக்கிறார்.

தற்பெருமை தவிர்த்து, வெறுமையாக்கி தன்னையே முழுமையாகத் தாழ்த்துகிறவரே உண்மையான தனது சீடர் என்று நம் ஒவ்வொருவரையும் அத்தகைய சீடத்துவத்திற்கு இரு கரம் விரித்து, இதயம் திறந்து அழைக்கிறார்.

ராபர்ட் ப்ராஸ்ட் என்னும் கவிஞர் கூறுவது போல: நான் செல்ல வேண்டிய தூரம் அதிகம். ஆனால், இன்று ஒரு அடி எடுத்து வைப்பேன், நம்பிக்கையோடு(அருட்பணி பவுல்ராஜ், சே.ச.)








All the contents on this site are copyrighted ©.