2010-03-01 15:48:29

மத அடிப்படைவாதத்தினால் தூண்டப்பட்ட வெறுப்புணர்வினால் உலகின் பல பாகங்களில் கிறிஸ்தவர்கள் துன்புறுகிறார்கள்- திருப்பீடப் பேச்சாளர்


மார்ச்01,2010 மத அடிப்படைவாதத்தினால் தூண்டப்பட்ட வெறுப்புணர்வினால் உலகின் பல பாகங்களில் கிறிஸ்தவர்கள் துன்புறுகிறார்கள் என்று திருப்பீடப் பேச்சாளர் இயேசு சபை அருள்தந்தை பெடரிக்கோ லொம்பார்தி கூறினார்.

"Octava Dies" என்ற வத்திக்கான் தொலைகாட்சி வார நிகழ்ச்சியில் இவ்வாறு கருத்து தெரிவித்த அருள்தந்தை லொம்பார்தி, கிறிஸ்தவர்க்கெதிரான வன்முறைகள், அண்மை நாட்களில் மீண்டும் தொடங்கியுள்ளன என்று குறிப்பிட்டார்.

மொசூல் நகரிலிருந்து கிறிஸ்தவர்கள் வெளியேற வேண்டுமென்ற கடும் அச்சுறுத்தல்களைக் கொண்ட துண்டுச் சீட்டுகள் சில காலத்திற்கு முன்னர் ஒவ்வொரு வீட்டிற்கும் கொடுக்கப்பட்டன, இப்போது இடம் பெற்றுள்ள கொடுமையான கொலைகள் அந்த அச்சுறுத்தலை ஊர்ஜிதம் செய்கின்றன என்றும் அருள்தந்தை லொம்பார்தி கூறினார்.

மொசூலில் கடந்த இரண்டு வாரங்களில் குறைந்தது எட்டு கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.








All the contents on this site are copyrighted ©.