2010-02-27 16:49:18

வறுமையில் வாடும் நாடோடி இனத்தவரின் மாண்பும் உரிமைகளும் மதிக்கப்படுவதற்கு திருப்பீட உயர் அதிகாரி அழைப்பு


பிப்.27,2010 வறுமையில் வாடும் நாடோடி இனத்தவரின் மாண்பும் உரிமைகளும் மதிக்கப்படுவதற்கு உழைப்பதற்கான கடமையை திருச்சபை கொண்டுள்ளது என்று திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
வத்திக்கானில் வருகிற செவ்வாயன்று தொடங்கும் நாடோடிகளுக்கான திருச்சபையின் மேய்ப்புப்பணி குறித்த மூன்று நாள் கருத்தரங்கு பற்றிப் பேசிய பேராயர் அகுஸ்தீனோ மர்க்கெத்தோ இவ்வாறு கூறினார்.
ஐரோப்பாவில் ஒரு கோடியே இருபது இலட்சம் முதல் இரண்டு கோடியே நாற்பது இலட்சம் வரையிலான நாடோடிகள் வாழ்கின்றனர் என்றும், குடிநீர், உணவு, குடியிருப்பு, சுகாதராம் போன்ற அடிப்படை வசதிகள் இந்றி இருக்கின்றனர் என்று, திருப்பீட குடியேற்றதாரர் அவைச் செயலரான பேராயர் மர்க்கெத்தோ கூறினார்.வறுமை மற்றும் சமூகத்தில் ஒதுக்கப்பட்ட நிலையை அகற்றுதல் எனும் தலைப்பில் ஐரோப்பியர்கள் இவ்வாண்டை கடைபிடித்து வருவது பற்றியும் குறிப்பிட்ட பேராயர், உரையாடல் மற்றும் ஒத்துழைப்பின் மூலம் திருச்சபையின் மேய்ப்புப்பணிகளை ஊக்குவிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.







All the contents on this site are copyrighted ©.