2010-02-27 16:51:03

புகையிலை தொடர்பான நோய்களால் ஆண்டுதோறும் ஏறத்தாழ 50 இலட்சம் பேர் உயிரிழப்பு


பிப்.27,2010 புகையிலை தொடர்பான நோய்களால் ஆண்டுதோறும் ஏறத்தாழ 50 இலட்சம் பேர் அதாவது ஒவ்வொரு 6 நொடிகளுக்கு ஒருவர் வீதம் இறக்கின்றனர் என்று ஐ.நா.அறிவித்தது.
புகையிலை பயன்படுத்தலைக் கட்டுப்படுத்தும் ஐ.நா. ஒப்பந்தம் அமுலுக்கு வந்ததன் 5ம் ஆண்டு இச்சனிக்கிழமை நிறைவுற்றதை முன்னிட்டு செய்தி வெளியிட்ட உலக நல வாழ்வு நிறுவன இயக்குனர் டாக்டர் Margaret Chan இவ்வாறு கூறினார்.
இந்த ஐ.நா. ஒப்பந்தத்தைச் செயல்படுத்தும் 117 நாடுகளில் ஏறத்தாழ 80 விழுக்காட்டு நாடுகள் புகையிலை சம்பந்தப்பட்ட பொருட்களைச் சிறார்க்கு விற்பனை செய்வதைத் தடை செய்துள்ளன என்றும் Dr Chan கூறினார்.புகையிலைக்கு வரி விதிப்பது அதன் பயன்பாட்டைக் கட்டுப் படுத்துவதற்குச் சிறந்த வழி என்றுரைத்த Dr Chan, 21 நாடுகள் மட்டுமே புகையிலைக்கு அதிகமான வரி விதித்துள்ளன என்று குறிப்பிட்டார்.







All the contents on this site are copyrighted ©.