2010-02-27 16:49:42

நல்ல மதிப்பீடுகளில் இளையோரை உருவாக்குவதில் திருச்சபைக்கு முக்கிய பங்கு உள்ளது


பிப்.27,2010 பக்தி, தன்னலமின்மை, தியாகம், பொதுநலப்பண்பு ஆகிய மதிப்பீடுகளை இளையோருக்கு வழங்குவதில் திருச்சபை முக்கிய பங்கு வகிக்கின்றது என்று இந்திய ஆயர் பேரவை கூட்டத்தில் கூறப்பட்டது.
இம்மாதம் 24ம் தேதி குவஹாட்டியில் தொடங்கிய இந்திய ஆயர் பேரவை கூட்டத்தில் உரையாற்றிய திருவனந்தபுரம் பேராசிரியர் ஆபிரகாம் ஜோசப் இவ்வாறு கூறினார்.
கத்தோலிக்கத் திருச்சபையின் துறவற சபைகளின் தலைவர்கள் தங்களது வாழ்வு மற்றும் செயல்கள் மூலம் இளையோருக்கு எடுத்துக்காட்டுகளாய்த் திகழ முடியும் என்று ஆபிரகாம் தெரிவித்தார்.
கிராமங்களிலிருந்து நகரங்களுக்குச் செல்லும் இளையோர் பற்றி இவ்வாயர்கள் கூட்டத்தில் பேசிய பார்பரா சங்மா, இத்தகைய இளையோர் பல நேரங்களில் உடல், உள்ள, ஆன்மீக, சமூக மற்றும் கலாச்சாரத் தனிமையை எதிர்நோக்குகின்றனர் என்று கூறினார்.இளையோருக்கு அமைதியும் நல்லிணக்கமும் என்ற தலைப்பில் நடைபெறும் இந்திய ஆயர்களின் 29வது ஆண்டுக் கூட்டம் மார்ச் 3ம் தேதி நிறைவடையும் இதில் 164 மறைமாவட்டங்களின் 163 ஆயர்கள் கலந்து கொள்கின்றனர்.







All the contents on this site are copyrighted ©.