2010-02-27 16:49:55

தீவிரவாத முஸ்லீம் அமைப்புக்களைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதில் பாகிஸ்தான் அரசு மெத்தனம், ஆயர்கள் கவலை


பிப்.27,2010 தீவிரவாத முஸ்லீம் அமைப்புக்களைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதில் பாகிஸ்தான் அரசு அக்கறையின்றி இருக்கிறதென அந்நாட்டு ஆயர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தான் ஆயர் பேரவையின் நீதி மற்றும் அமைதி ஆணையம் தயாரித்துள்ள அறிக்கையில், பாகிஸ்தான் அரசின் மந்த நிலைமை தாலிபான்கள் சுதந்திரமாக ஆட்சி செய்ய அனுமதியளிக்கின்றது எனக் கூறப்பட்டுள்ளது.
முஸ்லீமாக இல்லாமல் இருப்பவர் மீது JIZYA என்ற வரியை விதிப்பதற்கு, தீவிரவாத முஸ்லீம் அமைப்புகளுக்கு பாகிஸ்தான் அரசின் இந்நிலை ஊக்கப்படுத்துவதாக இருக்கிறதென்றும் இவ்வறிக்கை குறை கூறியுள்ளது.
அத்துடன் பணத்திற்காகக் கடத்தல், கொலை செய்தல், மக்கள் அடிக்கடி புலம் பெயர்தல் ஆகியவற்றுக்கும் இது காரணமாக உள்ளது என்றும் பாகிஸ்தான் ஆயர்களின் அறிக்கை கூறுகிறது.
பாகிஸ்தானில் தாலிபான்கள் பெரும்பான்மையாகவுள்ள பகுதியில் 2 சீக்கியர்கள் தலை வெட்டப்பட்டு கொல்லப்பட்டிருப்பதற்கு சீக்கிய சமூகத்துடனான தங்களின் ஒருமைப்பாட்டையும் தெரிவித்துள்ளனர் ஆயர்கள்.
மேலும், ஆப்கான் தலைநகர் காபூலில் விடுதிகள் மீது ஆயுததாரிகள் நடத்திய தொடர் தாக்குதல்களில் இந்திய தூதரக அதிகாரிகள் உட்பட இந்திய குடிமக்கள் 9 பேர் கொல்லப்பட்டுள்ளதாக இந்தியா அறிவித்துள்ளது. தற்கொலைக் குண்டுத்தாக்குதல்களை நடத்திய ஆயுததாரி்கள் ஆப்கன் பாதுகாப்பு படையினருடன் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டதில் இந்தியக் குடிமக்கள் உட்பட குறைந்தது 17 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.







All the contents on this site are copyrighted ©.