2010-02-26 16:03:14

தெற்காசிய நாடுகளில், வரும் 2015ம் ஆண்டில் வறுமையை ஒழிப்பது என்ற இலக்கை அடைய முடியாது' - "சோஷியல் வாட்ச்'


பிப்.26,2010 "இந்தியா உட்பட தெற்காசிய நாடுகளில், வரும் 2015ம் ஆண்டில் வறுமையை ஒழிப்பது மற்றும் அனைவருக்கும் கல்வி என்ற இலக்கை அடைய முடியாது' என, உலகளவிலான தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.

இந்தியாவில், அனைவருக்கும் அனைத்து அடிப்படை வசதிகளும் வழங்க வேண்டும் என்ற மில்லேனியம் வளர்ச்சி கொள்கைகள், பெரும் சவாலாகவே இருக்கும் என்று "சோஷியல் வாட்ச்' என்ற உலகளவிலான தன்னார்வ தொண்டு நிறுவனம் கூறியுள்ளது.

நாடுகள் பொருளாதாரத்தில் வளர்ச்சியடைந்திருந்தாலும், அவற்றில் மூன்றில் ஒரு பங்கு நாடுகள், தங்களின் அடிப்படை திறமை குறியீட்டை உயர்த்திக் கொள்ள தவறி விட்டன. ஆறில் ஒரு நாடு மட்டுமே, தங்களின் அடிப்படை திறமை குறியீட்டை உயர்த்திக் கொண்டுள்ளன என்றும் அந்நிறுவனம் கூறியுள்ளது.

"இந்தியாவின் பொருளாதாரம் வளர்ச்சியடைந்தாலும், மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதில், இன்னும் பின்தங்கியே உள்ளோம்' என்று இந்த நிறுவனத்தின் இந்திய அதிகாரி அமிதாப் ஜா கூறுகிறார்.

தெற்காசியா தற்போது, "அடிப்படை தகுதி குறியீட்டில்' 70 புள்ளிகள் பெற்றுள்ளது. வரும் 2015ம் ஆண்டு, இதை விட 10 புள்ளிகள் அதிகம் பெற்று, 80 புள்ளிகள் பெறும். இந்தியா தற்போது 68 புள்ளிகள் பெற்றுள்ளது. 130 நாடுகளுக்கு வழங்கப்பட்டுள்ள இந்த குறியீட்டு புள்ளிகள், அந்நாட்டின் குடிமக்களின் நலனான, குழந்தைகள் தொடக்க கல்வி வரை கல்வி பெறும் நிலை, குழந்தை இறப்பு வீதம், திறன் வாய்ந்தவர்கள் பார்க்கும் பிரசவங்களின் எண்ணிக்கை உட்பட பலவற்றை அடிப்படையாக கொண்டு கொடுக்கப்பட்டுள்ளது.

ஈரான் நாடே அதிகளவாக, அடிப்படை திறமை குறியீட்டில் 97 புள்ளிகள் பெற்றுள்ளன; குறைந்த அள வாக, ஆப்ரிக்கா 44 புள்ளிகள் பெற்றுள்ளன. இவ்வாறு அந்த தகவலில் கூறப்பட்டுள்ளது.








All the contents on this site are copyrighted ©.