2010-02-26 15:23:29

இந்திய விவிலிய கழகம் சமஸ்கிருத மொழியிலும் விவிலியத்தை வெளியிடுவதற்குத் திட்டமிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது


பிப்.26,2010 இந்திய விவிலிய கழகம் (பி.எஸ்.ஐ. BSI,) தொடங்கப்பட்டதன் இருநூறாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு சமஸ்கிருத மொழியிலும் விவிலியத்தை வெளியிடுவதற்குத் திட்டமிடப்படடுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் 203 மொழிகளில் வெளிவந்துள்ள திருவிவிலியத்தை, மேலும் 102 இந்திய மொழிகளில் வெளியிடுவதற்குத் திட்டமிடப்ப்டடுள்ளதாகவும் இக்கழகத்தின் பொதுச் செயலர் B.K.Pramanik கூறினார்.
"தற்காலத்துக்கு ஏற்ற வகையில் இலக்கிய மொழியான சம்ஸ்கிருதத்திலும் விவிலியத்தை மொழிபெயர்க்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதற்காக மொழி பெயர்ப்பாளர்களையும் நியமித்துள்ளோம்' என்றும் பி.கே.பிரமாணிக் தெரிவித்தார்.
பார்வையற்றோருக்கும் விவிலியத்தைக் கொண்டு சேர்க்கும் வகையில் ஆடியோ வடிவிலும் அது வெளியிடப்பட்டு வருகிறது என்றும் அவர் கூறினார்.
இன்னும், இந்த இருநூறாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இந்திய அரசு சிறப்பு தபால்தலை ஒன்றையும் வெளியிட்டுள்ளது. மேற்கு வங்காள ஆளுனர் எம்.கே.நாராயணன், புனித பவுல் பேராலயத்தில் இச்சிறப்பு தபால்தலையை வெளியிட்டுள்ளார்.
இந்திய விவிலிய கழகம் 1811ம் ஆண்டில் கொல்கட்டாவில் ஆரம்பிக்கப்பட்டது. இது, UBS என்ற ஐக்கிய விவிலிய கழகங்களின் ஓர் அங்கமாகும். UBS விவிலிய கழகமானது 200க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பகுதிகளில் 145 தனிப்பட்ட விவிலியக் கழகங்களை உறுப்பினர்களாகக் கொண்டுள்ளது. இது தற்சமயம் சுமார் 500 மொழிகளில் 600 மொழி பெயர்ப்புத் திட்டங்களில் ஈடுபட்டுள்ளது.







All the contents on this site are copyrighted ©.