2010-02-26 15:20:42

இந்திய ஆயர் பேரவை இருபாலருக்குமிடையே சமத்துவத்தை வலியுறுத்தும் ஏடு ஒன்றை வெளியிட்டுள்ளது


பிப்.26,2010 இந்திய திருச்சபையில் இருபாலருக்குமிடையே சமத்துவத்தை வலியுறுத்தும் 50 பக்க ஏடு ஒன்றை இந்திய ஆயர் பேரவை வெளியிட்டுள்ளது.
அசாம் மாநிலத்தின் குவஹாட்டி டொன் போஸ்கோ நிறுவனத்தில் நடைபெற்று வரும் இந்திய ஆயர் பேரவை கூட்டத்தில் இவ்வேட்டை வெளியிட்டார் அவ்வாயர் பேரவையின் முன்னாள் தலைவர் கர்தினால் டெலஸ்போர் டோப்போ.
இவ்வேடு குறித்து கருத்து தெரிவித்த இந்திய ஆயர் பேரவைத் தலைவர் கர்தினால் Varkey Vithayathil, இந்தியாவில் பெண்களின் முன்னேற்றத்திற்கு இந்த ஏடு மிகவும் உதவும் என்று தெரிவித்தார்.
இந்திய ஆயர் பேரவையின் பெண்கள் ஆணையத் தலைவர் ஆயர் பாப்பிஸ்ட் தாகூரின் தலைமையில் ஈராண்டுகளாக நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில் இந்த ஏடு வெளியிடப்பட்டுள்ளது.இந்தியாவின் 164 மறைமாவட்டங்களின் 163 ஆயர்கள் கலந்து கொள்ளும் இந்தக் கூட்டம் வருகிற புதனன்று நிறைவடையும்.







All the contents on this site are copyrighted ©.