2010-02-25 16:23:27

அடிமைத்தனம் உலகின் பல பாகங்களில் இன்னும் பழக்கமாக இருந்து வருகிறது - ஐ.நா. பொதுச் செயலர்


பிப்.25,2010 அடிமைத்தனம் உலகின் பல பாகங்களில் இன்னும் அருவருக்கத்தக்க பழக்கமாக இருந்து வரும் வேளை, இது ஒழிக்கப்பட வேண்டும் என்று ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன் கூறினார்.
கடந்த நான்கு நூற்றாண்டுகளில் இடம் பெற்ற அடிமை வியாபாரத்தின் அட்டூழியங்கள் பற்றிப் பரிசீலனை செய்து, அந்த வியாபாரத்திற்குப் பலியானவர்களை கௌரவிப்பதன் மூலம், இத்தகைய குற்றங்கள் மீண்டும் இடம் பெறாதிருக்க உதவ முடியும் என்று திரு மூன் மேலும் கூறினார்.
அடிமைத்தன வியாபாரங்களின் போது இடம் பெற்ற எண்ணற்ற துன்பங்கள் உலகை மாற்றியிருக்கின்றது என்றும் ஐ.நா. பொதுச் செயலர் தெரிவித்தார்.ஆப்ரிக்கா, ஆசியா, அமேரிக்கா மற்றும் ஐரோப்பாவில் அடிமைத்தனமும், அது போன்ற நடவடிக்கைகளும் இன்றும் இடம் பெற்று வருகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.







All the contents on this site are copyrighted ©.