2010-02-24 14:36:58

ஹெயிட்டியில் குரு மட மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள நிதி உதவிக்கு நன்றி தெரிவித்தார் பேராயர் Louis Kébreau


பிப்.24,2010 தங்கள் நாட்டுக்கு, சிறப்பாக அங்குள்ள குரு மட மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள நிதி உதவிக்கு தன் மனமார்ந்த நன்றியைக் கூறுவதாகத் தெரிவித்தார் ஹெயிட்டியின் ஆயர் பேரவைத் தலைவர் பேராயர் Louis Kébreau.
சனவரி மாதம் ஹெயிட்டியில் பேரிழப்பை ஏற்படுத்திய நிலநடுக்கத்தில் 26 குரு மாணவர்கள் இறந்தனர் என்றும், ஏறத்தாழ 200 குருமாணவர்கள் தங்கள் குருமடங்களை இழந்துள்ளனர் என்றும் செய்திக்குறிப்பொன்று கூறுகிறது.
இந்த குருமானவர்களுக்கென ACN எனப்படும் Aid to the Church in Need அமைப்பு இதுவரை இரண்டு லட்சம் டாலர் நிதியுதவி செய்துள்ளதை நன்றியுடன் நினைவு கூர்ந்த பேராயர் Kébreau இது போன்ற உதவிகளால் ஹெயிட்டியை மீண்டும் கட்டியெழுப்பும் நம்பிக்கையை இந்த உதவி நிறுவனங்கள் வளர்த்து வருவதாகக் கூறினார். இந்த நிலநடுக்கத்தில் முற்றிலும் தரை மட்டமான ஹெயிட்டியின் தலைநகரை மீண்டும் கட்டியெழுப்பும் போது, புதிய ஒரு சம நீதி கலாச்சாரத்தையும் கட்டியெழுப்பும் சவாலை தாங்கள் சந்திப்பதாக பேராயர் கூறியுள்ளார்.இதற்கிடையே, இத்திங்களன்று பேசிய ஹெயிட்டியின் அரசுத் தலைவர் Rene Preval இந்த நில நடுக்கத்தில் மூன்று லட்சம் பேர் இறந்திருக்கக் கூடும் என்றும் இந்த எண்ணிக்கை முன்னர் அறிவிக்கப்பட்ட எண்ணிக்கையை விட அதிகம் என்றும் அறிவித்தார்.







All the contents on this site are copyrighted ©.