2010-02-24 14:39:06

தகவல் தொலைத்தொடர்பு தொழில் நுட்பச் சேவைகள் உலகின் எல்லா நாடுகளிலும் வளர்ச்சியைக் கண்டுள்ளது - .நா.வின்அறிக்கை


பிப்.24,2010 கடந்த சில ஆண்டுகள் உலகம் பொருளாதார பின்னடைவைச் சந்தித்திருந்தாலும்,  ICT எனப்படும் தகவல் தொலைத்தொடர்பு தொழில் நுட்பச் சேவைகள் உலகின் எல்லா நாடுகளிலும் வளர்ச்சியைக் கண்டுள்ளதென ஐ.நா.வின் (The UN International Telecommunication Union - ITU - Measuring the Information Society 2010) 2010 அறிக்கையொன்று கூறுகிறது.
இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள 159 நாடுகளிலும் தகவல் தொலைத்தொடர்பு தொழில் நுட்பம் முன்னேற்றம் அடைந்துள்ளது என்றும் இந்த முன்னேற்றத்திற்கு முக்கிய காரணம் மக்கள் அதிகமாய் பயன்படுத்தும் (Cellular) தொழில் நுட்பம் என்றும் இவ்வறிக்கைக் கூறுகிறது.

உலகத்தில் இன்று 500 கோடி மக்கள் mobile cellular சேவையை பயன்படுத்துகின்றனர் என்றும், இந்த வளர்ச்சியால் தகவல் தொலைத்தொடர்பு தொழில் நுட்பச் சேவைகளுக்கான கட்டணங்கள் அண்மைக்காலங்களில் குறைந்து வருவது தொழில் நுட்பத்துறையினரை உற்சாகப்படுத்தும் ஒரு போக்கு என்று அகில உலக தொலைத் தொடர்பு ஐக்கியத்தின் இயக்குனர் திரு Al Basheer Al Morshid செய்தியாளர்களிடம் கூறினார்.துரிதமாக இயங்கும் இணையதள வசதி தற்போது எல்லா நாடுகளிலும் உள்ளதெனினும் அதன் பயன்பாடு, வளர்ந்துள்ள ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளில் 23 விழுக்காடாகவும், வளர்ந்து வரும் ஆசிய, ஆப்ரிக்க நாடுகளில் 3.5 விழுக்காடே உள்ளதெனவும் ஐ.நா.வின் இந்த அறிக்கை மேலும் கூறுகிறது.







All the contents on this site are copyrighted ©.