2010-02-24 14:36:39

ஐ.நா.வில் நடைபெறும் கருத்தரங்கில் கலந்து கொள்ள இந்தியாவிலிருந்து அருட்சகோதரி ஒருவர் அழைக்கப்பெற்றுள்ளார்


பிப்.24,2010 மார்ச் முதல் தேதியிலிருந்து ஐ.நா வில் நடைபெறும் கருத்தரங்கில் கலந்து கொள்ள இந்தியாவிலிருந்து அருட்சகோதரி ஒருவர் அழைக்கப்பெற்றுள்ளார். பெண்களுக்கான சம உரிமை வழங்குவதைக் குறித்து 1995ஆம் ஆண்டு Beijing மாநாட்டில் எடுக்கப்பட்ட ஐ.நா.வின் தீர்மானங்கள் இதுவரை எவ்வகையில் நடைமுறை படுத்தப்பட்டுள்ளன என்பதை அறிவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த கருத்தரங்கில் கலந்து கொள்ள  நாசரேத் சபையைச் சார்ந்த அருட்சகோதரி Ann Moyalan அழைக்கப் பட்டுள்ளார்.
இந்தியாவில் பெண்கள், சிறப்பாக, பெண் துறவியர் வறிய நிலையில் உள்ள பெண்கள் மத்தியில் எடுத்து வரும் பல்வேறு நல வாழ்வு முயற்சிகளைக் குறித்து இந்த ஐ.நா. கூட்டத்தில் பேச இருப்பதாக அருட்சகோதரி Ann Moyalan கூறினார். இந்தியாவில் கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக பெண்களின் நிலையை உயர்த்த மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேரும் முயற்சிகளை இந்த உலகம் சரியாக உணராததால், இந்த தருணத்தைப் பயன்படுத்தி, பெண்களுக்கென இந்தியாவில் மேற்கொள்ளப்படும் முயற்சிகளை உலக அரங்கில்  எடுத்துச் சொல்வதும், உலகின் பல நாடுகளில் வறுமை நிலையில் உள்ள பெண்களுக்கென உழைக்கும் பல்வேறு சமூக அமைப்புக்களுடன் உறவுகளை ஏற்படுத்துவதுமே தன் பயணத்தின் முக்கிய நோக்கம் என்று அருட்சகோதரி Ann Moyalan கூறினார். டில்லியில் உள்ள ஒரு சேரிப் பகுதியில் பெண்களுக்கு, சிறப்பாக முஸ்லிம் பெண்களுக்கு கல்வியறிவை வளர்ப்பதில் அருட்சகோதரி Ann Moyalan ஈடுபட்டுள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.







All the contents on this site are copyrighted ©.