2010-02-24 14:37:30

அமெரிக்க, சீன  அறிவாளர்கள் மத்தியில் உறவுகளை வலுப்படுத்த அமெரிக்க இயேசு சபையினர் முயற்சி


பிப்.24,2010 அருட்தந்தை Matteo Ricci இறந்த நான்காம் நூற்றாண்டு அனுசரிக்கப்படும் இந்த ஆண்டில், அமெரிக்க சீன எழுத்தாளர்கள், அறிவாளர்கள் மத்தியில் இன்னும் அறிவுப் பூர்வமான உறவுகளை வலுப்படுத்த அமெரிக்க ஐக்கிய நாட்டில் உள்ள இயேசு சபையினர் முயற்சி செய்து வருகின்றனர்.
1595ல் Matteo Ricci நட்பைக் குறித்து சீன மொழியில் எழுதி, பிரசுரித்த நூல் ஒன்று இந்த முயற்சிக்கு உந்துதலாக இருந்ததென்று அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தைச் சார்ந்த இயேசு சபை குரு ஒருவர் கூறினார்.

Malatesta என்று அழைக்கப்படும் இந்த திட்டத்தினால் அமெரிக்க, சீன அறிவாளர்களிடையே உருவாகும் இந்த உறவு, இறையியல் குறித்த அறிவை வளர்க்கவும், சீன கலாச்சாரத்தை இன்னும் ஆழமாய் உணர்ந்து அதன் விளைவாக கத்தோலிக்க பாரம்பரியம் பழைமை வாய்ந்த சீன கலாச்சாரத்தில் இன்னும் அதிகமாய் வேரூன்றவும் உதவும் என்று அவர் மேலும் கூறினார்.Shanghai இலுள்ள Sheshan குருமடத்தில் முதன் முதலாக இறையியல் பாடங்களைச் சொல்லித் தந்த அருட்தந்தை Edward Malatestaவின் நினைவாக இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதென செய்திக் குறிப்பு ஒன்று கூறுகிறது.







All the contents on this site are copyrighted ©.