2010-02-24 14:36:26

மத்திய பிரதேச அரசு அமல் படுத்தவிருக்கும் அரசாணைக்கெதிராக கத்தோலிக்கர்கள் எதிர்ப்பு 


பிப்.24,2010 மத்திய பிரதேச அரசு அமல் படுத்தவிருக்கும் அரசாணைக்கெதிராக அந்த மாநிலத்தில் உள்ள கத்தோலிக்கர்கள் தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்க, பொது மக்களின் ஆதரவை நாடியுள்ளனர்.
கத்தோலிக்க, கிறிஸ்தவ கோவில்களைச் சார்ந்த சொத்துக்களை அரசின் அதிகாரத்திற்கு உட்படுத்த வேண்டுமெனும் அரசாணை ஒன்றை மத்திய பிரதேசத்தில் ஆட்சியிலிருக்கும் பாரதீய ஜனதா கட்சி இத்திங்களன்று ஆரம்பமான சட்ட மன்ற கூட்டத்தில் நிறைவேற்ற இருப்பதாக வந்த செய்தியை அடுத்து கத்தோலிக்கர்கள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
பாரதிய ஜனதா கட்சி சில ஆண்டுகளுக்கு முன்னர் மக்களை மத மாற்றம் செய்வது குறித்த தடைகளை தங்கள் மீது திணித்ததாகவும், இப்போது கோவில் சம்பந்தமான சொத்துக்களை, முக்கியமாக திருச்சபைக்குச் சொந்தமான நிலங்களை தன் வசப்படுத்த இந்த அரசு முயல்வதாகவும் இது சிறுபான்மையினருக்கு எதிரான அநீதி என்றும் Sagar மறை மாவட்ட ஆயர் Anthony Chirayath கூறினார். இது போன்ற அரசாணைகள் பலுகினால், வழிபாட்டு நேரங்கள், வழிபாட்டு முறைகள் ஆகியவை குறித்தும் அரசு ஆணைகள் பிறப்பிக்க ஆரம்பித்து விடும் என்று Sagar மறைமாவட்ட பிரதிநிதி அருட்தந்தை தாமஸ் லால் பாதில் (Pathil) கூறினார்.







All the contents on this site are copyrighted ©.