2010-02-23 14:42:53

திருத்தந்தையுடன் நடத்தப்பட்ட பேச்சு வார்த்தைகள் மூவகையான படிப்பினைகளைத் தலத் திருச்சபைக்குத் தந்துள்ளது அயர்லாந்து ஆயர் ஒருவர்


பிப்.23,2010 அயர்லாந்து திருச்சபையில் இடம் பெற்ற பாலியல் முறைகேடான நடவடிக்கைகள் குறித்து அண்மையில் திருத்தந்தையுடன் நடத்தப்பட்ட பேச்சு வார்த்தைகள் மூவகையான படிப்பினைகளைத் தலத்திருச்சபைக்குத் தந்துள்ளதாகக் கூறினார் அந்நாட்டு ஆயர் ஒருவர்.

கடந்த காலத்தை நேர்மையுடன் எதிர்கொள்ளல், நிகழ்காலத்தை உறுதியுடன் ஏற்றல், வருங்காலத்தை நம்பிக்கையுடன் நோக்குதல் போன்ற மூன்றும், திருத்தந்தையுடனான சந்திப்பின் வழி கிட்டியவை என்றார் Galway ஆயர் Martin Drennan

திருச்சபையின் அதிகாரிகளுள் சிலர் பாலியல் முறையில் தவறாக நடந்ததைக் குறித்து விவாதித்த இக்கூட்டம், இக்குற்றத்தைத் திருத்தந்தை எவ்வளவு தீவிரமாக எடுத்துள்ளார் என்பதை நமக்குக் காட்டுகிறது என்றார் அயர்லாந்தின் பிறிதொரு ஆயர் Michael Smith

அயர்லாந்து ஆயர்கள் அனைவரும் இக்கூட்டத்தில் தங்கள் கருத்துக்களை முன் வைத்ததாகவும், திருத்தந்தையின் கருத்துக்கள் அடங்கிய சுற்று மடல் இன்னும் சில வாரங்களில் அயர்லாந்து திருச்சபைக்கு அனுப்பப்படும் எனவும் கூறினார் ஆயர்.








All the contents on this site are copyrighted ©.