2010-02-22 14:40:46

திருத்தந்தையின் மூவேளை ஜெப உரை


பெப். 22. தந்தை தனக்களித்த பணிகளை அதன் உண்மை நிலைகளோடு முழுமையாக ஏற்பதற்கு இயேசு எடுத்த முடிவின் விளைவே, அவர் தன் பணிக்காலத்தின் துவக்கத்தில் எதிர்கொண்ட மூன்று சோதனைகளும் என்றார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

தவக்காலத்தில் நுழைவது என்பது என்னவென, ஞாயிறு நற்செய்தி வாசகத்தில் காணப்படும் இயேசுவின் சோதனைகள் நமக்கு விளக்கமளிக்கின்றன எனவும் கூறினார் பாப்பிறை.

கடவுளின் துணையின்றி நம் வாழ்வை திட்டமிட முனையும் நம் எண்ணங்களிலிருந்தும், பாவங்களிலிருந்தும் விடுதலை வழங்கவே இயேசு வந்தார் என உரைத்த பாப்பிறை, வெறும் அறிக்கைகளினால் அல்ல, மாறாக சாத்தானின் சோதனைகளுக்கு எதிராக நேரடியாக சிலுவை வரை போராடி அவர் வெற்றி கண்டார் என்றார்.

உலகம் என்பது நம் தனிப்பட்ட மாற்றங்களிலிருந்தே முன்னேறத் துவங்குகிறது, ஆகவே நம்மில் சரியில்லாதவைகளை இறை அருளின் துணையோடு மாற்ற முயல்வோம் என்றார் திருத்தந்தை.

கடவுளின் வார்த்தைகள் நம் இதயத்திலும் மனதிலும் புகுந்து நம் வாழ்வாக மாறும்போது, சோதனைகளை துணிவுடன் வெற்றிகாணமுடியும் என மேலும் கூறிய பாப்பிறை, தான் ஆண்டு தியானத்தை மேற்கொள்ள உள்ள இவ்வேளையில் தனக்காகவும் தன்னுடன் தியானம் செய்யும் திருப்பீட அதிகாரிகளுக்காகவும் செபிக்குமாறும் வேண்டினார்.








All the contents on this site are copyrighted ©.