2010-02-19 13:25:16

தவக்காலச் சிந்தனை.


RealAudioMP3 பிப். 20. "இயேசுவின் பந்தியமர்தலே அவரது சிலுவைச் சாவிற்கான முக்கியக் காரணம்" என்கிறார் இறையியல் வல்லுநர் ரெய்மண்ட் ப்ரெளன்.

இன்றய நற்செய்தியில் இயேசு லேவியை அழைத்ததோடு அவரது இல்லத்தில் பந்தியமர்கிறார். சமூகத்தால் தீண்டத்தகாதவராகக் கருதப்படும் லேவியைத் தனது சீடராக்கியதன் மூலம் இயேசு சமூகப் பாகுபாட்டைச் சாடுகிறார். வரிதண்டுபவர்களோடும் பாவிகளோடும் இவர் உண்டு குடிக்கிறாரே? என பரிசேயரும் மறைநூல் அறிஞர்களும் முணுமுணுப்பதன் மூலம் சமூக அநீதிக்கு சாவு மணி அடிக்கிறார். மருத்துவர் நோயற்றவர்க்கல்ல, நோயுற்றவர்க்கே தேவை என இயேசு கூறி தனது இறையாட்சிச் செயல்பாட்டிற்கு புதிய அர்த்தம் தருகிறார்.

இவ்வாறு இயேசுவின் இறையருசுப் பணியானது ஒரு தலைகீழ் புரட்டலாக இன்றைய சாதீய, அநீத ஏற்றத்தாழ்வு மிக்க நமது சமூகத்தை மாற்றும் பணியாக, அதில் சீடர்களாக நமது லேவியைப் போன்று நமது சீடத்துவ வாழ்வும் அமைந்திட அழைப்பு விடுக்கின்றது.

"என்னைப் பின்பற்றி வா" என்று அழைக்கும் இயேசுவிற்கு நமது பதிலிறுப்பு தான் என்ன? பின்பற்றுவோமா! அல்லது விட்டு விலகுவோமா!!








All the contents on this site are copyrighted ©.