2010-02-19 14:32:32

சீனாவின் சமூக நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதில் சமயத் தலைவர்களுக்கு முக்கிய பங்கு இருக்கின்றது-SARA புதிய தலைவர்


பிப்.19,2010 சீனாவின் பொருளாதார வளர்ச்சி மற்றும் சமூக நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதில் சமயத் தலைவர்களுக்கு முக்கிய பங்கு இருக்கின்றது என்று SARA என்ற சமய விவகாரங்களுக்கான அரசு நிர்வாகத்தின் புதிய தலைவர் கூறினார்.

சீன அரசால் அங்கீகரிக்கப்பட்ட அந்நாட்டின் புத்த, கத்தோலிக்க, இசுலாம், பிரிந்த கிறிஸ்தவ சபை மற்றும் தாவோயிஸ்ட் மதங்களின் தலைவர்களைப் புத்தாண்டை முன்னிட்டு சந்தித்த SARAவின் புதிய தலைவர் Wang Zuo’an, இவ்வாறு கூறினார்.

நிலையான மற்றும் வேகமான பொருளாதார வளர்ச்சியைக் கைக்கொள்ளவும், சமூக நல்லிணக்கம் மற்றும் நிலைத்த தன்மையைப் பாதுகாக்கவும் சமயப் பணி இன்றியமையாதது என்றும் Wang கூறினார்.








All the contents on this site are copyrighted ©.