2010-02-19 14:34:16

உலகப் பொருளாதாரப் பின்னடைவு, ஆசிய-பசிபிக் பகுதியில், மேலும் இரண்டு கோடியே பத்து இலட்சம் பேரைக் கடும் வறுமைக்கு உட்படுத்தும்- ஐ.நா.வின் புதிய ஆய்வு


பிப்.19,2010 உலக அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பின்னடைவு, ஆசிய-பசிபிக் பகுதியில், மேலும் இரண்டு கோடியே பத்து இலட்சம் பேரைக் கடும் வறுமைக்கு உட்படுத்தும் என்று ஐ.நா.வின் புதிய ஆய்வு ஒன்று எச்சரிக்கிறது.

வேலையில்லாமல் இருப்போர் மற்றும் குறைவான ஊதியம் பெறுவோரில் இருபது விழுக்காட்டினர் மட்டுமே வேலைவாய்ப்பற்றோர் மற்றும் தொழில் சந்தைத் திட்டங்களுக்கானச் சலுகைகளைப் பெறுகின்றனர் என்று அவ்வாய்வு தெரிவிக்கிறது.

இந்த ஆய்வை, ESCAP என்ற ஆசிய-பசிபிக் பகுதிக்கான ஐ.நா.வின் பொருளாதார மற்றும் சமூகக் கமிஷனும், UNDP என்ற ஐ.நா.வளர்ச்சித் திட்ட அமைப்பும், ADB என்ற ஆசியவளர்ச்சி வங்கியும் மேற்கொண்டன.

மேலும், எகிப்தில் இலட்சக்கணக்கான சிறார் வறுமையில் வாழ்கின்றனர் என்று UNICEF வெளியிட்ட ஆய்வு கூறுகிறது.

இவ்வாய்வு குறித்துப் பேசிய, மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்ரிக்காவுக்கான UNICEF இயக்குனர் Sigrid Kaag, 18 வயதுக்கு உட்பட்ட சிறாரில் ஏறத்தாழ பாதிப்பேர் ஒரு நாளைக்கு இரண்டு டாலருக்குக் குறைவான வருவாயில் வாழ்கின்றனர் என்று கூறினார்.








All the contents on this site are copyrighted ©.