இலங்கை புத்த பீடாதிபதிகளின் மாநாடு ஒத்திப்போடப்பட்டதற்கு அரசின் அழுத்தமே காரணம்'
பிப்.19,2010 இலங்கையில் குடியரசுத் தலைவர்க்கானத் தேர்தலில் போட்டியிட்டுத் தோற்ற முன்னாள்
இராணுவத் தளபதி ஜெனரல் சரத் ஃபொன்சேகா விவகாரம் குறித்து விவாதிப்பதற்காக இடம் பெறவிருந்த
'புத்த பீடாதிபதிகளின் மாநாடு ஒத்திப்போடப்பட்டதற்கு அரசின் அழுத்தமே காரணம்' என்று சொல்லப்பட்டுள்ளது.
இது
குறித்து இலங்கை புத்த பீடாதிபதிகள் சார்பில் பேசிய, அதங்கன்னே ரத்னபால தேரோ, சரத் பொன்சேகா
விவகாரம் தொடர்பாக தாங்கள் கூட்டவிருந்த இந்தச் சிறப்புக் கூட்டத்தை ஒத்திப்போட்டுள்ளதற்கு
அரசு தந்த அழுத்தம் காரணம் என்று தெரிவித்துள்ளார்.
''இலங்கை அரசுக்கு ஆதரவாகவுள்ள
கட்சிகளின் பிரதிநிதிகளும் புத்த பிக்குகளும் மல்வத்தை தலைமை பீடாதிபதி திரிபத்துவவே
சிறி சுமங்கல அவர்களைச் சந்தித்து அழுத்தம் தந்திருந்தனர். அரசுக்கு ஆதரவு தருகிற புத்த
பிக்குகள் பீடாதிபதியிடம் மூன்று மணி நேரத்துக்கும் அதிகமாகப் பேச்சு நடத்தியுள்ளனர்.
அந்தப் பிக்குகள் தலைமை பீடாதிபதி அவர்களை மிகுந்த அழுத்தத்துக்கு உள்ளாக்கியிருந்தனர்'',
என்று அவர் கூறியதாக ஊடகச் செய்தி ஒன்று கூறுகிறது.