2010-02-19 14:31:34

ஆஸ்திரேலிய ஆங்லிக்கன் கிறிஸ்தவ சபை ஒன்று கத்தோலிக்கத் திருச்சபையில் இணைவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளது


பிப்.19,2010 ஆஸ்திரேலிய ஆங்லிக்கன் கிறிஸ்தவ சபை ஒன்று கத்தோலிக்கத் திருச்சபையில் இணைவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Forward in Faith என்ற பழமைவாத ஆஸ்திரேலிய ஆங்லிக்கன் கிறிஸ்தவ சபையினர் சிட்னியில் இத்திங்களன்று நடத்திய சிறப்புப் பொதுக் கூட்டத்தில், கத்தோலிக்கத் திருச்சபையில் இணைவதற்கு விருப்பம் தெரிவித்து ஏகமனதாக வாக்களித்துள்ளனர்.

தங்களின் ஆன்மீக மரபுகளை அனுசரித்துக் கொண்டு, அதேவேளை கத்தோலிக்கத் திருச்சபையில் இணைவதற்குத் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் விடுத்திருந்த அழைப்புக்கு இணங்க, இந்த ஆஸ்திரேலிய ஆங்லிக்கன் கிறிஸ்தவ சபை முதன் முதலாக முன்வந்துள்ளது.

இந்தக் கிறிஸ்தவ சபையில் ஏறத்தாழ 200 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். எனினும் அனைத்து உறுப்பினர்களும் கத்தோலிக்கத் திருச்சபையில் உடனடியாக இணைவார்கள் என்று எதிர்பார்க்க இயலாது என்று ஊடகங்கள் அறிவித்துள்ளன.








All the contents on this site are copyrighted ©.