2010-02-19 14:26:26

அருளாளர்களைப் புனிதர் நிலைக்கு உயர்த்துவது குறித்த கூட்டம்


பிப்.19,2010 ஆறு அருளாளர்களைப் புனிதர் நிலைக்கு உயர்த்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் வத்திக்கானில் திருத்தந்தையின் முன்னிலையில் இவ்வெள்ளியன்று நடைபெற்றது.

போலந்து நாட்டுத் துறவறக்குரு Stanislao Soltys,(Order of Canons Regular Lateranense 1433-1489),

திருச்சிலுவை துறவு சபையின் கானாடா நாட்டு துறவி Andre Bessette(1845-1937), ஸ்பெயினில் இயேசுவின் புதல்விகள் துறவு சபையைத் தொடங்கிய Candida Maria de Jesus Cipitria y Barriola(1845-1912),

திருஇதயத்தின் புனித வளன் சகோதரிகள் சபையை நிறுவிய ஆஸ்திரேலியாவின் திருச்சிலுவை மேரியின் MacKillop,(1842-1909),

திருஇதயத்தின் மறைக்கல்வி சகோதரிகள் சபையை நிறுவிய இத்தாலியரான Giulia Salzano (1846-1929),

ஏழைக் கிளாராச் சபையைச் சேர்ந்தவரும், இத்தாலியில் Camerino என்ற நகரில் புனித கிளாரா அடைபட்ட துறவு மடத்தை ஆரம்பித்தவருமான அருட்சகோதரி Battista da Varano (1458- 1524)

ஆகிய ஆறு அருளாளர்கள் குறித்த கூட்டம் நடைபெற்றது.

வருகிற அக்டோபர் 17ம் தேதி ஞாயிறன்று நடைபெறும் திருப்பலியில் இந்த ஆறு அருளாளர்களும் புனிதர் நிலைக்கு உயர்த்தப்படுவார்கள் எனவும் திருப்பீடம் அறிவித்துள்ளது.








All the contents on this site are copyrighted ©.