2010-02-18 15:39:06

தலித் கிறிஸ்தவர்கள் குறித்த ரெங்கநாத் மிஸ்ரா கமிஷன் அறிக்கை


பிப்.18,2010 அன்பர்களே, இந்தியாவில் சிறுபான்மையினரின் நிலை குறித்து ஆய்வு செய்து அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் நோக்கத்தில் மத்திய அரசு, இந்தியாவின் முன்னாள் தலைமை நீதிபதி Ranganath Mishra தலைமையிலான குழுவிடம் அந்தப் பொறுப்பை ஒப்படைத்தது. இந்தக் குழு, 2007ம் ஆண்டு மே மாதத்தில் தனது ஆய்வறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பித்தது. இந்த அறிக்கையில், இந்தியாவிலுள்ள மற்ற சிறுபான்மை மதத்தவர் போலவே, தலித் கிறிஸ்தவர்களும் தலித் முஸ்லீம்களும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்த ரெங்கநாத் மிஸ்ரா கமிஷன் அறிக்கையானது கடந்த டிசம்பரில் நடைபெற்ற நாடாளுமன்ற குளிர்காலத் தொடரில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த விவகாரம் குறித்து அறிவதற்கு, அருள்பணியாளர் காஸ்மன் ஆரோக்யராஜ் அவர்களைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டோம். டெல்லியிலுள்ள இவர், இந்திய ஆயர் பேரவையின் பிற்படுத்தப்பட்டோர் ஆணையச் செயலர்.

RealAudioMP3







All the contents on this site are copyrighted ©.