2010-02-18 15:09:45

இஸ்ரேல் மீது சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் குற்றச்சாட்டு


பிப்.18,2010 ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக்கரையில் பாலஸ்தீனர்களின் வாழ்க்கையை மிகவும் மோசமாக்கும் நடவடிக்கைகளில் இஸ்ரேல் அரசு தொடர்ச்சியாக ஈடுபடுவதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் கூறியுள்ளது.
இஸ்ரேலிய கொள்கையைக் கடுமையாக விமர்சிக்கும் செஞ்சிலுவைச் சங்கத்தின் ஒரு அறிக்கை, சுமூகமான வாழ்க்கையை வாழ்வது என்பது பல பாலஸ்தீனர்களுக்கு அங்கு முடியாத காரியமாகியுள்ளதெனக் கூறுகிறது.
அடிக்கடி அவர்களால், பள்ளிகளுக்கு, வேலைக்கு மற்றும் மருத்துவ மனைகளுக்கு செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும், பாலஸ்தீன விவசாயிகளுக்கு வாழ முடியாத சூழ்நிலை ஏற்பட்டிருப்பதாகவும், 50 விழுக்காட்டுக்கும் அதிகமானோர் வறுமையில் சிக்கியுள்ளதாகவும் செஞ்சிலுவைச் சங்கம் கூறுகிறது.
இஸ்ரேலுக்கு பாதுகாப்பு கரிசனைகள் இருக்கின்ற போதிலும், அதற்கும், பாலஸ்தீன மக்களின் உரிமைகளைப் பேணுவதற்கும் இடையில் ஒரு சமநிலையைப் பேண வேண்டும் என்றும் செஞ்சிலுவைச் சங்கம் கூறியுள்ளது.







All the contents on this site are copyrighted ©.